- Advertisement -
Homeபொழுதுபோக்குஅட இந்த விஷயத்தில் அந்த படத்தை தி கோட் படம் முறியடிக்கவில்லையா? ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள்...

அட இந்த விஷயத்தில் அந்த படத்தை தி கோட் படம் முறியடிக்கவில்லையா? ஏமாற்றத்தில் விஜய் ரசிகர்கள் – நெகட்டிவ் விமர்சனங்கள்தான் காரணமா…

- Advertisement -

நடிகர் விஜய் நடிப்பில் நேற்று வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம். இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் ரூ. 400 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளது. விஜய் சம்பளம் மட்டுமே இதில் ரூ. 200 என்பது குறிப்பிடத்தக்கது. படத்தை வெங்கட்பிரபு, இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து 3 சிங்கிள்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில், பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவரவில்லை. 4வது சிங்கிள் மட்ட பாடலும் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஆனால் டிரெய்லர் பெரிய அளவில் ரீச் ஆனது. 45 மில்லியன் பார்வையாளர்களை கடந்து அதிகளவில் கவனம் பெற்றது.

- Advertisement -

நேற்று தமிழக அரசு ஒருநாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதித்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 1150க்கும் அதிகமாக திரைகளில் தி கோட் காட்சிகள் திரையிடப்பட்டது. கேரளாவில் 700 திரைகளில் 4000க்கும் அதிகமான காட்சிகள் திரையிடப்பட்டன. ஏனெனில் அங்கு அதிகாலை 4 மணி, காலை 7 மணி காட்சிகளுக்கும் கேரள அரசு அனுமதி தந்திருந்தது.

அதே போல் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களிலும் அதிகாலை 7 மணி முதல் காட்சிகள் திரையிடப்பட்டன. நடிகர் விஜய்க்கு தமிழ்நாட்டை போலவே கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரசிகர் கூட்டம் மிக அதிகம் என்பதும், பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பார்க்கும் ரசிகர் கூட்டமும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று இந்தியா முழுவதும் தி கோட் படத்தின் மொத்த வசூல் 43 கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 38.3 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகிறது. இதுதவிர தெலுங்கில் ரூ. 3 கோடியும். இந்தியில் 1.7 கோடி ரூபாயும் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே உலகம் முழுவதும் மொத்தமாக ரூ. 95 வசூல் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அது உறுதிப்படுத்தபடவில்லை.

ஆனால் கடந்த ஆண்டில் அக்டோபரில் வெளியான லியோ படம் முதல் நாளில் உலகம் முழுவதும் வசூலித்தது ரூ. 145 கோடி என அந்த படத்தை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமே அறிவித்திருந்தது. அதனால் லியோ படத்துடன் ஒப்பிடுகையில், தி கோட் அந்த அளவுக்கு பெரிய வசூலை தொடவில்லை. முதல் நாள் வசூலில் லியா படத்தை தி கோட் முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்