- Advertisement -
Homeபொழுதுபோக்குஇதை விடவா தேசிய விருது பெரியது? ஓட்டலில் சாப்பிடச் சென்ற கவிஞர் சினேகனுக்கு நேர்ந்த அனுபவம்...

இதை விடவா தேசிய விருது பெரியது? ஓட்டலில் சாப்பிடச் சென்ற கவிஞர் சினேகனுக்கு நேர்ந்த அனுபவம் – அவரே சொன்ன தகவல்தான் இது!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் நடிகர் சினேகன். சில படங்களில் அவர் நடித்தும் இருக்கிறார். விஜய் டிவியில் கடந்த 2017ம் ஆண்டில் துவங்கிய பிக்பாஸ் முதல் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் கவிஞர் சினேகன். இதில் அவர் டைட்டில் வரை வந்த 2ம் இடத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

இப்போது கவிஞர் சினேகன் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக ஆதரவாளராக இருந்து வருபவர் கவிஞர் சினேகன். மேலும் இந்த முறை மக்கள் நீதிமய்யம் தேர்தலில் போட்டியிட்டு இருந்தால் சினேகனுக்கு கண்டிப்பாக கமல் சீட் ஒதுக்குவதாக இருந்தது.

- Advertisement -

ஆனால் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மக்கள் நீதிமய்யம் கட்சிக்கு மிகவும் குறைவான எண்ணிக்கையில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவர்களது டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிடாமல் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தப்பட்டதால் கமல் ஆதரவு மட்டும் தருகிறோம் என்று கூறி தொகுதி பங்கீடு வேண்டாம் என்று நிராகரித்து விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் சினேகன் கூறியதாவது, மதுரையில ஒரு ரோட்டோட ஓட்டல் கடையில் நான் டிபன் சாப்பிட போனேன். சின்ன ஓட்டல் தான் அது. அப்போது ஆறு பேர் சாப்பிட்டுட்டு இருந்தாங்க. அங்க ஒரு சின்ன பையன் வேலை செய்கிறான்.

- Advertisement -

அவன் என்னை மட்டும் கேட்டு நல்லா கவனிச்சு கவனிச்சு டிபன் பரிமாறினார். நான் சாப்பிட்டுட்டு பில் எவ்வளவு என்று கேட்கிறேன். அந்த பையன் அண்ணா காசு நான் கொடுக்கிறேன் என்று சொல்கிறான். ஏண்டான்னு கேட்டால், எங்க அம்மாவுக்கு உங்களை ரொம்ப பிடிக்கும்ன்னு சொன்னான். என்னடா காரணம்ன்னு கேட்டால், ஆராரிராரோ பாட்டு ரொம்ப பிடிக்கும்ன்னு சொல்லிட்டு இருப்பாங்க அண்ணா என்றான்.

நீ என்னடா பண்றேன்னு கேட்டேன். சனி ஞாயிறு மட்டும் இங்கே வந்து வேலை செய்வேன் அண்ணா. அப்பா இல்லை என்று சொன்னான். எவ்வளவு சம்பளம்ன்னு கேட்டேன். ஒரு நாளைக்கு 100 ரூபாய் என்று சொன்னான். ஆனா நான் சாப்பிட்ட பில் 80 ரூபாய். அந்த காசை எனக்கு தரேன்னு சொல்றான். இதைவிட ஒரு தேசிய விருது என்ன கிடைக்கும் எனக்கு என்று கவிஞர் சினேகன் அந்த நேர்காணலில் நெகிழ்ச்சியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்