தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனர் வசந்த் இயக்கிய சில படங்களில் உதவி இயக்குனராக இருந்தவர் எஸ்ஜே சூர்யா. பிறகு வாலி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அஜீத்குமார் இரட்டை வேடங்களில் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சிம்ரன் நாயகியாக நடித்திருந்தார்.
தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த குஷி படத்தை எஸ்ஜே சூர்யா இயக்கினார். இந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. இதில் நாயகியாக ஜோதிகா நடித்திருந்தார். தொடர்ந்து அன்பே ஆருயிரே நியூ கள்வனின் காதலி திருமகன் வியாபாரி என பல படங்களில் எஸ்ஜே சூர்யா நடித்தார்.
இதற்கிடையே 10 ஆண்டுகள் சினிமாவை விட்டு விலகியிருந்த அவர் மீண்டும் இறைவி படம் மூலம் ரீ என்ட்ரி தந்தார். இப்போது வில்லனாக பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் வில்லன் கேரக்டரில் மிக அதிகமாக நடித்து வரும் நடிகர் என்றால் அது எஸ்ஜே சூர்யா தான். மாநாடு ராயன் இந்தியன் 2 கேம் சேஞ்சர் என பல படங்களில் வில்லனாக நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் மற்றும் இயக்குனர் எஸ் ஜே சூர்யா கூறியதாவது, சென்னையில் இருக்கிற சில ஹோட்டல்ல நான் சர்வராக வேலை செஞ்சிருக்கேன். நான் ஹோட்டல்ல சர்வராக வேலை பார்க்கும் போது கூட ஐயோ என்னடா இது? நம்ம போற இடம் வேற ஆச்சே? இப்ப போய் டேபிள் தொடைச்சிட்டு இருக்கோமேன்னு நினைக்காத ஒரு ஆள் நான்.
டேபிள் தொடைச்சிட்டு இருப்பேன். என்கூட படித்த நண்பர்கள் அங்கு வருவார்கள். நான் கூச்சமே படமாட்டேன். இதுல கூச்சப்பட என்ன இருக்கு? அது என்னோட வேலை. வேலைன்னு வந்துட்டா மேலே கீழே அப்படீன்னு நினைக்க மாட்டேன். அன்னைக்கு டேபிள் தொடைப்பது என் வேலை. அதை நான் சரியாக செய்தேன்.
உங்களோட உண்மையான உழைப்புக்கு ஊதியம் வந்தால் அதுதான் கடவுள். எனக்கு டைரக்சன் டேபிள் தொடைக்கறது சினிமாவில் நடிப்பு தாயும் தந்தை எல்லாமே எனக்கு ஒன்றுதான் என்று இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் ஜே சூர்யா அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





