- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அந்த தவறுகளை நான் செய்திருக்க கூடாது - வெளிப்படையாக பேசிய...

தனுஷ் சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் அந்த தவறுகளை நான் செய்திருக்க கூடாது – வெளிப்படையாக பேசிய லீடர் பட இயக்குனர்!

- Advertisement -

கடந்த 2013ம் ஆண்டில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் துரை செந்தில்குமார். அடுத்து காக்கிசட்டை கொடி பட்டாஸ் கருடன் போன்ற படங்களை இயக்கிய அவர் இப்போது லீடர் படத்தை ரசிகர்களுக்கு தந்திருக்கிறாதர்.

லெஜண்ட் அருள் சரவணன் நடிப்பில் நேற்று வெளியான லீடர் படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் துரை செந்தில்குமார் தனது படங்கள் குறித்து கூறியதாவது, காக்கி சட்டை படத்தில் இரண்டாம் பாதியில் மனோபாலா சார் பாத்திரத்தை சேர்த்ததில் எனக்கு திருப்தி இல்லை.

- Advertisement -

நான் முதலில் தனுஷூக்கு காக்கி சட்டை கதையை எழுதிய போது மிகவும் சீரியஸான ஒரு படமாக அது இருந்தது. ஆனால் சிவகார்த்திகேயன் படமாக அது மாறிய போது அதற்குள் என்டர்டைன்மெண்ட் மிஸ் ஆகக் கூடாது என பலரும் சொன்னார்கள். மேலும் அந்த சமயத்தில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

எனவே எதிர்நீச்சல் படத்துக்கு பிறகு அவருடன் படம் செய்யும்போது எண்டர்டெயினிங்காக செய்ய வைத்து விடுங்கள். சீரியஸாக செய்ய வைக்க வேண்டாம் என்றனர். அதனை மாற்ற முயற்சித்தது எனக்கு படம் ரிலீஸ்க்கு பிறகு சரியாக படவில்லை. கொடி படத்துக்கு போகும்போது முதலில் 35 நாட்கள் ஷூட்டிங் செய்து விட்டு வந்து விடுவோம். பிறகு கிளைமாக்ஸை எழுதிவிட்டு தான் ஷூட்டுக்கு போவோம் என்று நினைத்தேன்.

- Advertisement -

ஆனால் தனுஷ் முதல் நாளிலிருந்து 52 நாட்கள் எங்களுடன் பொள்ளாச்சியில் இருந்தார். அந்த நாட்களுக்குள் அவரின் இரட்டை வேட காட்சிகளுடன் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு தான் அனுப்பி வைத்தோம். ஏனென்றால் தாடி வைத்திருந்தார். வேறு படங்களுக்கு அவரால் போக முடியாது என்ற சூழல். நான் அவைலபிளாக இருக்கிறேன். என்னை வைத்து முடித்து விடுங்கள் என்று தனுஷ் என்னிடம் சொன்னார்.

அவர் தரப்பில் தப்பு கிடையாது. நான்தான் கிளைமாக்ஸில் கடைசி 20 நிமிடங்களை இன்னும் கொஞ்சம் சிறப்பாக எழுத வேண்டும். அதற்கு இடைவெளி கிடைக்கும் என்ற நினைத்து இருந்து விட்டேன். இனிமேல் அதை நான் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதை புரிந்துக்கொண்டேன். அதுபோல் பட்டாஸ் திரைப்படத்திலும் கமர்ஷியல் விஷயங்களுக்காக ஸ்கிரிப்ட்டில் செய்த மாற்றங்களை செய்திருக்க வேண்டாம் என்று இப்போது தோன்றுகிறது என்று இயக்குனர் துரை செந்தில்குமார் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்