- Advertisement -
Homeபொழுதுபோக்குவிளம்பரத்தில் நடிக்க நடிகை நயன்தாரா செய்த அட்ராசிட்டி - லேடி சூப்பர் ஸ்டாரை கைவிட்ட மாதிரி...

விளம்பரத்தில் நடிக்க நடிகை நயன்தாரா செய்த அட்ராசிட்டி – லேடி சூப்பர் ஸ்டாரை கைவிட்ட மாதிரி இந்த அலப்பரையை கொஞ்சம் விடுவாங்களா?

- Advertisement -

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நயன்தாரா. அடுத்து ரஜினி விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகையாக மாறினார். பிறகு கடந்த பல ஆண்டுகளாக லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்பட்டார்.

இந்நிலையில் நேற்றிரவு அறிக்கை ஒன்றை வௌியிட்ட நடிகை நயன்தாரா, இனிமேல் என்னை யாரும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்க வேண்டாம். நயன்தாரா என்று மட்டும் அழைத்தால் போதும் என்று அறிக்கை வெளியிட்டார். நடிகர்கள் அஜீத்குமார் கமலை தொடர்ந்து தனது லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறந்தார் நயன்தாரா

- Advertisement -

நயன்தாரா சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி விளம்பரங்களில் அதிகமாக நடிக்கிறார். குறிப்பாக பெரிய ஜவுளி நிறுவனங்கள் நகைக்கடைகள் பெண்கள் பயன்படுத்தும் அழகு சாதன பொருட்கள் விளம்பரங்களில் அதிகமாக நடிக்கிறார். அவரே அழகு சாதனை பொருட்களும் தயாரிப்பு விற்பனை நிறுவனமும் நடத்தி வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு நகைக்கடை விளம்பரம் ஒன்றில் நடிக்க வந்த நடிகை நயன்தாரா, ஒரு நாள் முழுக்க என்னால் நடிக்க முடியாது என்று கூறி, 2 நாட்களுக்கு 4 மணி நேரம் வீதம் 8 மணி நேரம் நடித்து தருகிறேன். அதனால் 2 நாள் சம்பளமாக பெற்றுக்கொள்கிறேன் என ஒரு கணிசமான தொகையை பேசியிருக்கிறார்.

- Advertisement -

மேலும் அவருடன் 20க்கும் மேற்பட்ட சக நடிகர் நடிகையர் மற்றும் அவரது பவுன்சர்கள் உதவியாளர்கள் என, அவர்களுக்கும் 2 நாட்கள் சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் விளம்பர ஷூட்டிங்குக்கு வந்த நயன்தாரா, 8 மணி நேரம் ஒரே நாளில் நடித்து தருகிறேன் என 8 மணி நேரம் நடித்து முடித்து 2 நாள் சம்பளத்தை பெற்றிருக்கிறார்.

ஆனால் அவருடன் 2 நாள் சம்பளம் பேசி ஒரு நாள் முழுக்க நடித்தவர்களுக்கு ஒரு நாள் சம்பளம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி அந்த 8 மணி நேரமும் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் போன் வைத்திருக்க கூடாது என்றும் கண்டிஷன் போட்டுவிட்டுதான் நயன்தாரா நடிக்க வந்திருக்கிறார். அதனால் அங்கிருந்த அனைவரது செல்போனும் பறிக்கப்பட்டு, இரவுதான் திருப்பி தரப்பட்டுள்ளது. இந்த அலப்பரை பண்றாங்களே இது நியாயமா என அவர்கள் புலம்பி தீர்த்துள்ளனர்.

- Advertisement -

சற்று முன்