- Advertisement -
Homeபொழுதுபோக்குரேஸ் விடுவோமா? அஜித்தை வம்புக்கு இழுக்கும் வகையில் மோட்டார் சைக்கிளோடு களமிறங்கிய மஞ்சு வாரியர், வைரல்...

ரேஸ் விடுவோமா? அஜித்தை வம்புக்கு இழுக்கும் வகையில் மோட்டார் சைக்கிளோடு களமிறங்கிய மஞ்சு வாரியர், வைரல் புகைப்படங்கள்

- Advertisement -

மலையாள திரையுலகில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருபவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் தனுஷ் நடித்த “அசுரன்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பரிச்சயமானார். அதனை தொடர்ந்து அஜித்தின் “துணிவு” திரைப்படத்தில் ஆக்சன் கதாநாயகியாக ரசிகர்களை அசரவைத்தார்.

மஞ்சு வாரியர் மலையாளத்தில் “சாக்ஸ்யம்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து மலையாளத்தில் டாப் நடிகர்களுடன் நடித்த மஞ்சு வாரியர், 1998 ஆம் ஆண்டு மலையாள நடிகர் திலிப் குமாரை திருமணம் செய்துகொண்டார். எனினும் கடந்த 2015 ஆம் ஆண்டு திலிப் குமாரிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

- Advertisement -

திருமணத்திற்கு பின் மலையாள சினிமா உலகில் இருந்து ஒதுங்கியிருந்த மஞ்சு வாரியர், விவாகரத்துக்கு பின் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு பிறகு “ஹவ் ஆர் யூ” என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்தார்.

மஞ்சு வாரியர் “துணிவு” திரைப்படத்தை தொடர்ந்து மலையாளத்தில் “ஆயிஷா”, “வெள்ளரி பட்டணம்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது “காயாட்டம்” என்ற மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் ஹிந்தியில் “அம்ரிக்கி பண்டித்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

“துணிவு” திரைப்படம் வெளியாவதற்கு முன்பு அஜித்துடன் பல இடங்களுக்கு பைக்கில் ரைடு சென்றார் மஞ்சு வாரியர். அப்போது வெளிவந்த புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் தற்போது தனது பிஎம்டபுள்யூ பைக்கில் மஞ்சு வாரியர் ரைடு சென்றுள்ளார். அப்புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

- Advertisement -

சற்று முன்