- Advertisement -
Homeபொழுதுபோக்குமக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கு ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ - 30 லட்சம் ரூபாயை ஆட்டைய...

மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுக்கு ‘பிம்பிலிக்கி பிலாப்பி’ – 30 லட்சம் ரூபாயை ஆட்டைய போட்ட ஆண்டவர் கமல்ஹாசன் – நேர்மையான கொம்பன் இப்படி பண்ணலாமா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என பல ஆண்டுகளாக தமிழக மக்கள் எதிர்பார்த்த நிலையில் திடீரென மக்கள் நீதிமய்யம் அரசியல் இயக்கத்தை துவங்கி அரசியல் களத்தில் குதித்தவர் நடிகர் கமல்ஹாசன். நடிகராக பெரிய உச்சத்தை தொட்டதை போலவே அரசியலிலும் அவர் பெரிய அளவில் பேசப்படுவார் என்றுதான் ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் நடிகர் கமல்ஹாசனுக்கு கிடைத்த அன்பும் ஆதரவும் அமோக வரவேற்பும் அரசியல்வாதி கமல்ஹாசனுக்கு மக்கள் மத்தியில் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் திமுக குறித்தும் அதிமுக குறித்தும் பாஜக குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த கமலின் அரசியல் பிரவேசம் பெரிய அளவில் கண்டுக்கொள்ளப்படவில்லை.

- Advertisement -

இந்த சூழலில் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் சட்டசபை தேர்தல்களில் தோல்வியை சந்தித்த கமல்ஹாசன், திடீரென ஸ்டாலின் மீதும் அவரது மகன் உதயநிதி மீதும் அன்பை வெளிப்படுத்தினார். ஒரு கட்டத்தில் திமுகவின் ஆதரவாளராக மாறிய அவர் அறிவாலயம் சென்று தனது ஆதரவை தெரிவித்தார்.

இப்போது திமுகவின் ஒத்துழைப்போடு ராஜ்யசபா எம்பி ஆக கமல்ஹாசன் அரசியல் களத்தில் பவனி வருகிறார். இந்த சூழலில் இந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், அக்கட்சி சார்ந்த நிர்வாகிகள் 60 பேர் வரை டெபாசிட் தொகை ரூ. 50 ஆயிரம் செலுத்தி விருப்பமனு பெற்றுள்ளனர்.

- Advertisement -

ஆனால் உதயசூரியன் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும். டார்ச் லைட்டை நீங்கள் வெளியே எடுக்க வேண்டாம் என்று ஸ்டாலின் கமலிடம் கூறிய நிலையில், இதற்கு மநீம கட்சி மாநில நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்ததால் கமல்ஹாசன், எங்களுக்கு தொகுதிகள் வேண்டாம். பலத்த ஆதரவு மட்டும் தருகிறோம் என்கிற முடிவை அறிவித்து பின்வாங்கி விட்டார்.

இது ஒரு சிறந்த முடிவாக பார்க்கப்பட்டாலும், விருப்பமனு பெற்ற 60 பேரிடம் வாங்கிய 30 லட்சம் ரூபாய் பணம் அவர்களுக்கு திருப்பித் தரப்படவில்லை. இப்போது அந்த பணம் கட்சி வளர்ச்சி நிதிக்கு போய்விட்டது. திருப்பி தர முடியாது என மநீம கட்சி தலைமை அறிவித்துள்ளது. நான் நேர்மையான கொம்பன் என்று மேடைக்கு மேடை பேசும் தலைவர் கமல்ஹாசன் இப்படி செய்யலாமா என கட்சியினர் புலம்பி வருகின்றனர். டிபாசிட் பணத்தை எப்படி கட்சி வளர்ச்சி நிதியாக பயன்படுத்த முடியும்? யாரை கேட்டு கமல் இப்படி முடிவு செய்தார் என்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்