- Advertisement -
Homeபொழுதுபோக்குதிருமணம் செய்துகொள்ளாததற்கு இதுதான் காரணமா?.. பல கால சீக்ரெட்டை உடைத்த விஷால்.. என்ன இப்படி சொல்லிட்டார்

திருமணம் செய்துகொள்ளாததற்கு இதுதான் காரணமா?.. பல கால சீக்ரெட்டை உடைத்த விஷால்.. என்ன இப்படி சொல்லிட்டார்

- Advertisement -

அர்ஜுனிடம் உதவி இயக்குநராக இருந்து பிறகு செல்லமே படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷால். முதல் படம் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தன. அதன்படி அவர் நடித்த சண்டகோழி, திமிரு, தாமிரபரணி படங்கள் வரிசையாக ஹிட்டடித்தன. இதனால் பெரும் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வர வாய்ப்புகள் இருப்பதாக ஆரூடம் கூறப்பட்டது.

ஆனால் விஷால் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக சில படங்கள் தோல்வியடைந்தன. இருந்தாலும் பாலா இயக்கத்தில் அவன் இவன் படத்தி நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மாறு கண் வைத்துக்கொண்டு அவர் சிறந்த நடிப்பையே வெளிப்படுத்தியிருந்தார். இருந்தாலும் அந்தப் படம் சரியாக போகவில்லை. இதற்கிடையே கடன் பிரச்னை, ஸ்ரீரெட்டி விவகாரம், தேர்தலுக்கு நாமினேஷன் செய்தது என தொடர்ந்து சர்ச்சைகளையும் சந்தித்தார்.

விஷால் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் கடைசியாக அவருக்கு என்ன ஹிட் படம் என்று அவருக்கே நியாபகம் இல்லாத நிலைதான் நீடித்தது. அதனை மாற்றும் விதமாக அமைந்திருக்கிறது மார்க் ஆண்டனி திரைப்படம். சமீபத்தில் வெளியான அந்தப் படம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. எனவே படம் ஹிட் வரிசையில் இணைந்திருக்கிறது. அடுத்ததாக ஹரி இயக்கத்தில் நடிக்கிறார் விஷால்.

இந்நிலையில் தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் தான் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது குறித்து பேசியிருக்கிறார். அவர் பேசுகையில், “திருமணம் செய்துகொள்வது சாதாரண விஷயம் இல்லை.அதற்கு பக்குவமும், புரிதலும் வேண்டும். திடீரென ஒரு முடிவு எடுத்துவிட்டு பிறகு ஏன் இப்படி ஆகிப்போச்சே என்று யோசிக்கவே கூடாது

ஏனென்றால் திருமணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அந்தப் பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிடக்கூடாது. இதுமட்டுமில்லாமல் நடிகராகவும் எனக்கு நிறைய பொறுப்புகள் இருக்கின்றன. அதெல்லாம் முடிந்த பிறகு எனது வாழ்க்கையில் திருமணம் நடக்க வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால் அது எனது வாழ்க்கையிலே நிச்சயமாக நடக்கும்.

மக்கள் என்னை ஒரு நடிகனாக கடந்த 19 வருடங்களாக உட்கா வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் அல்லவா. அதற்காகத்தான் எனது ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் முதியவர்கள் இல்லத்துக்கு வழக்கமாக சென்றுகொண்டிருக்கிறேன்.அதன் பிறகுதான் மற்ற இடங்களுக்கு நான் போவேன். பசியோடு இருப்பவர்கலுக்கு வயிறு நிறைய சோறு போட வேண்டும் என்பதை விஜயகாந்த்திடமிருந்துதான் கற்றுக்கொண்டேன்.

அவரின் அலுவலகத்தில் எப்போதுமே சமையல் நடந்துகொண்டு இருக்கும். யார் போனாலு வயிறு நிறைய சாப்பிடலாம். அதைத்தான் இப்போது நான் செய்கிறேன்” என்றார். இதற்கிடையே அவருக்கு சில வருடங்கள் முன்பு ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்து திருமணம்வரை செல்லாமல் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்