தமிழ் சினிமாவில் இயக்குனராக நடிகராக வலம் வருபவர் செல்வராகவன். இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மூத்த மகன். நடிகர் தனுஷின் அண்ணன் என்ற அடையாளங்களை கொண்டவர். காதல் கொண்டேன் 7ஜி ரெயின்போ காலனி புதுப்பேட்டை ஆயிரத்தில் ஒருவன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்தவர். இப்போது மென்டல் மனதில் என்ற படத்தை டைரக்ட் செய்திருக்கிறார்.
திரைப்பட இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் இயக்குனர் செல்வராகவன் ஹீரோவாக நடித்திருக்கும் படம் மனிதன் தெய்வமாகலாம். இந்த படம் நாளை 10ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் குஷி ரவி நடிகை கௌசல்யா மைம் கோபி ஒய் ஜி மகேந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். மனிதன் தெய்வமாகலாம் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இதற்காக நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது, பிரச்சினை என்னவாக இருந்தாலும் நம்முடைய பிரச்சனைகளுக்கு யாரும் ஆறுதலாக இருக்க மாட்டார்கள். நம்முடைய பிரச்சினைகளை அடுத்தவர்களிடம் சொன்னால் அவர்கள் அதை சுமையாக தான் பார்ப்பார்கள்.
நம்முடைய பிரச்சினைகளுக்கு அடுத்தவர்களிடம் ஆறுதல் நிச்சயமாக கிடைக்கவே கிடைக்காது. நண்பர்கள் உறவினர்கள் ஆயிரம் வார்த்தைகள் சொல்லலாம். ஆனால் நமக்கான ஆறுதல்கள் அதில் கிடைக்கவே கிடைக்காது. ஆறுதல் என்பது உங்களுக்குள் ஆறுதல் கிடைத்தால் தானே அது ஆறுதல்? அப்படி இருக்கும்போது எதற்காக வேஸ்ட்டாக அடுத்தவர்களிடம் நாம் ஆறுதல் தேட வேண்டும்?
ஆறுதல் எப்போது கிடைக்கும் என்றால் நம்மை நாம் ஆறுதல் படுத்திக் கொண்டால் மட்டும் தான் கிடைக்கும். இதனால்தான் என்னுடைய சோகத்துக்கு மருந்தாக யாருமே எனக்கு இல்லை. நான் யாரிடமும் ஆறுதல் தேடவில்லை. எப்போதுமே நான் தனிமையில் இருப்பதை தான் விரும்புகிறேன். நான் தனிமையின் காதலன். தனிமை மட்டும்தான் சுகமே. மத்ததெல்லாம் இம்சை தான்.
இதுவரையிலும் நான் யாரிடமும் ஒரு அழகான காதலை உணர்ந்ததே இல்லை. ஒரு பெண் கடந்து போகும் போது மனசில் ஒரு பரிசம் தோன்றும். மற்றபடி வேறு எதுவும் இல்லை என்று அந்த நேர்காணலில் இயக்குனர் மற்றும் நடிகர் செல்வராகவன் கூறியிருக்கிறார். எந்த உறவுகளும் நம் பிரச்னைகளுக்கு ஆறுதலை தர முடியாது என்று அவர் கூறியிருப்பது இணையத்தில் தற்போது விவாதமாக மாறியுள்ளது.





