- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த நேரத்தில் எனக்கு சீமான் மீது கோபமாக வந்தது, நம்பித்தானே அவரது வீட்டுக்கு போனேன்? -...

அந்த நேரத்தில் எனக்கு சீமான் மீது கோபமாக வந்தது, நம்பித்தானே அவரது வீட்டுக்கு போனேன்? – விழா ஒன்றில் வெளிப்படையாக பேசிய இயக்குனர் பாலா!

- Advertisement -

தமிழ் சினிமாவின் நடிகர் விக்ரம் நடித்த சேது படம் மூலம் கடந்த 1999ம் ஆண்டில் இயக்குனராக அறிமுகமானவர் பாலா. இயக்குனர் பாலுமகேந்திராவிடம் தொழில் கற்றவர். அவரது படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். சேது படத்தை தொடர்ந்து பல படங்களை பால இயக்கினார்.

அவர் இயக்கிய நந்தா நான் கடவுள் பிதாமகன் அவன் இவன் பரதேசி தாரை தப்பட்டை நாச்சியார் வணங்கான் உள்ளிட்ட படங்களில் பல பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களாக இருந்தன. ஆனால் கடைசியான பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் வெளியான வணங்கான் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் நடந்த திரைப்பட விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பாலா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து வெளிப்படையாக பல விஷயங்களை பேசினார். அவருக்கும் தனக்கும் பல ஆண்டுகளாக இருந்து வரும் நெருக்கமான நட்பு குறித்தும் வெளிப்படையாக கூறினார்.

அப்போது இயக்குனர் பாலா பேசியதாவது, நானும் அண்ணன் சீமானும் நெருங்கிய உறவில் நட்பில் இருப்பவர்கள். ஆரம்ப காலங்களில் பசி அதிகமாக எடுத்தால் நேராக அவரது வீட்டுக்குத்தான் நான் செல்வேன். அங்கு எப்போதும் 20 பேர் சாப்பிட்டு கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கும் சேர்த்து சீமான் சம்பாதித்தார்.

- Advertisement -

ஒருமுறை நான் இயக்குனரிடம் கோபித்துக் கொண்டு சீமான் வீட்டுக்கு தான் சென்றேன். அங்கு மூன்று நாட்கள் இருந்தேன். என்னை கவனித்த சீமான், என் இயக்குனர் பாலு மகேந்திராவிடம் சொல்லி அவரை அங்கு அழைத்து வந்து விட்டார். பாலு மகேந்திரா என்னை பார்த்ததும் அழுதுவிட்டார். பின்பு அவருடன் நான் கிளம்பிச் சென்றேன். இவரை அழைத்து வந்து என்னை வீட்டிலிருந்து அனுப்பி விட்டாரே என்று சீமானிடம் கோபப்பட்டேன்.

அன்பாக இருந்தால் சீமான் அண்ணனை கருவாயா என்பேன். அவர் அன்பாக இருந்தால் தம்பி என்பார். கோபமாக இருந்தால் வாங்க போங்க என்பார். இன்று பெரிய அரசியல் தலைவரான பின்பு அவரை கருவாயா என்று கூற முடியவில்லை என்று வருத்தப்படுகிறேன் என்று இயக்குனர் பாலா அந்த விழா மேடையில் பேசியிருக்கிறார். தொடர்ந்து அந்த மேடையில் அவர் கருவாயா என சீமானை அழைக்க அவரும் அன்பாக தம்பி என்று அழைத்து பரவசப்பட்டார்.

- Advertisement -

சற்று முன்