தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த வெற்றி படங்களை தந்த சிறந்த இயக்குனர் ஹரி. ஐயா படம் மூலம் நயன்தாராவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவரே இயக்குனர் ஹரிதான். ஆனால் ஐயா படத்துக்கு பிறகு இதுவரை ஹரி பல படங்களை இயக்கி விட்டார். ஆனால் நயன்தாரா மீண்டும் ஹரி இயக்கத்தில் இதுவரை நடிக்கவில்லை. இதுதான் சினிமாவில் ஏற்றிவிட்ட ஏணியை மறந்து விடுவது என்று பழமொழியை சொல்வார்கள்.
ஐயா படத்துக்கு பிறகு, தாமிரபரணி படத்தில் நடிக்க மீண்டும் ஒருமுறை நயன்தாராவை இயக்குனர் ஹரி நடிக்க அழைத்த போது, அவர் நடிக்க மாட்டேன் என்று மறுத்துவிட்டார். ஏனெனில் அப்போது பல படங்களில் நடித்து அவர் முன்னணி நாயகியாக வளர்ந்திருந்தார். அதன்பிறகுதான் தாமிரபரணி படத்தில் பானு நாயகியாக நடித்தார்.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து டைரக்டர் ஹரி பல நல்ல வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கோவில், சாமி, வேல், தாமிரபரணி, பூஜை, சிங்கம் உள்ளிட்ட பல படங்களை குறிப்பிட்டு சொல்லலாம். குறிப்பாக 2010ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி – நடிகர் சூர்யா கூட்டணி வெளிவந்த படம் சிங்கம். இந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்து ஆறு, வேல் போன்ற படங்களிலும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.அந்த படத்தில் நடிகர் சூர்யாவின் மீசை, அவர் பேசிய ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெய்ட்ரா என்ற பஞ்ச் வசனமும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆனது. பிரகாஷ்ராஜின் வில்லத்தனமான நடிப்பு படத்துக்கு இன்னும் கூடுதல் பலத்தை கொடுத்தது. அழகான அனுஷ்கா படத்துக்கு இன்னும் மெருகேற்றினார். அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள்,அதிரடி வசனங்கள், அசத்தலான பாடல்கள், எரிமலை எப்படி பொறுக்கும் என்ற விவேக் காமெடியும் இந்த படத்தை பிளாக்பஸ்டர் மூவியாக மாற்றியது.
தொடர்ந்து சிங்கம் 2 சிங்கம் 3 என்று இரண்டு பாகங்கள் வெளிவந்தன. ஆனால் சிங்கம் 2 பெற்ற வெற்றியை, சிங்கம் 3 பெறவில்லை. இந்நிலையில், சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் இயக்குனர் ஹரி கூறியதாவது, சிங்கம் 4 பற்றி நானும் சூர்யாவும் இதுவரை எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஏனென்றால் சிங்கம் 3 வரை போதும் என்றுதான் அதை பற்றி பேசவில்லை.
இதுவரை வெளிவந்த சிங்கம் 3 வரை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய கதையாக இருந்தது. கதாபாத்திரங்களும் அப்படியே இருக்கும். மீண்டும் கதாபாத்திரங்களை மாற்றி வேறொரு கதை, ஆனால் தலைப்பு மட்டும் சிங்கம் என்று வைத்தால் அது வியாபாரத்துக்கு பண்ணுவது போலத்தான் இருக்கும். படத்தில் திருப்தி இருக்காது. அதனால் தான் சிங்கம் 4 வேண்டாம் என்று முடிவு செய்தோம். முதல் பாகம் எடுக்கும் போதே இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தோம். அதற்கான நம்பிக்கை இருந்தது என்று அந்த நேர்காணலில் ஹரி கூறியிருக்கிறார்.





