- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு படத்துக்கு இசையமைக்க விரும்பிய இசைப்புயல் ஏஆர் ரகுமான், கடைசியில் அவர் விலகியது ஏன்? -...

கருப்பு படத்துக்கு இசையமைக்க விரும்பிய இசைப்புயல் ஏஆர் ரகுமான், கடைசியில் அவர் விலகியது ஏன்? – இயக்குனர் ஆர்ஜே பாலாஜி சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

ஆரம்பத்தில் காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் ஆர்ஜே பாலாஜி. பிறகு எல்கேஜி படம் மூலம் அவர் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன் வீட்ல விசேஷம் சிங்கப்பூர் சலூன் சொர்க்கவாசல் உள்ளிட்ட படங்களில் ஆர் ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடித்தார்.

இதைத்தொடர்ந்து ஆர் ஜே பாலாஜி நடிகர் சூர்யா நடித்த கருப்பு என்ற படத்தை டைரக்சன் செய்தார். இந்த படத்தில் திரிஷா சுவாசிகா ஷிவதா யோகிபாபு இந்திரன்ஸ் மன்சூர் அலிகான் நட்டி நடராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் வில்லனாக ஆர்ஜே பாலாஜியே நடித்திருக்கிறார். கருப்பு படத்துக்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

கருப்பு படத்திலிருந்து டீசர் மற்றும் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகி உள்ளன. வருகிற மே மாதம் 14ம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இதற்கிடையே வருகிற 24 அல்லது 25ம் தேதியில் மதுரையில் கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை படக்குழுவினர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் நடிகர் சூர்யா நடிகை திரிஷா இயக்குனர் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக் குழுவினர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் கருப்பு படம் குறித்து பேசிய இயக்குனர் ஆர்ஜே பாலாஜி முக்கியமான ஒரு தகவலை கூறியிருக்கிறார். கருப்பு படத்திற்கு முதலில் ஏஆர் ரகுமான் தான் இசையமைக்க இருந்தார். ஆனால் கடைசியில் அவர் கருப்பு படத்தில் இருந்து விலகிவிட்டார் என்கிற தகவலை கூறியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, மூக்குத்தி அம்மன் படம் வெளியான பிறகு நானும் ஏஆர் ரகுமான் சாரும் சந்தித்தோம்.

- Advertisement -

நாம் இணைந்து பணியாற்றலாமா? என்று ஏஆர் ரகுமானே என்னிடம் கேட்டார். நான் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தேன். அவரிடம் கருப்பு படத்தின் கதையை விவரித்தேன். அவர் சிறப்பாக பண்ணிவிடலாம் என்றார். அதன் பின்னர் ஐந்து முறை இதுதொடர்பாக நாங்கள் சந்தித்தோம். ஆனால் அப்போது அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் சில பிரச்னைகள் வந்து விட்டன.

அதனால் அவர், என்னால் இந்த படத்தை கச்சிதமாக செய்ய முடியுமா என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. கருப்பு படத்தின் படப்பிடிப்பும் தொடங்கி விட்டது. நாம் இப்போது என்ன செய்யலாம்? என்று என்னிடம் கேட்டார். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. எங்களுக்கு உடனடியாக ஒரு பாடல் தேவைப்பட்டது. அதனால் சாய் அபயங்கரின் முந்தைய பணி எங்களுக்கு பிடித்திருந்தது. அதனால் அவரை கருப்பு படத்தில் ஒப்பந்தம் செய்தோம் என்று ஆர்ஜே பாலாஜி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்