- Advertisement -
Homeபொழுதுபோக்குமறைந்த நடிகை சௌந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க போட்டி போடும் 2 முன்னணி நாயகிகள் -...

மறைந்த நடிகை சௌந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க போட்டி போடும் 2 முன்னணி நாயகிகள் – யாருக்கு சான்ஸ் என ஆர்வம் காட்டும் ரசிகர்கள்!

- Advertisement -

தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்தவர் நடிகை சௌந்தர்யா. இயக்குனர் ஆர்வி உதயகுமார் இயக்கத்தில் நவரச நாயகன் நடிகர் கார்த்திக் நடித்த பொன்னுமணி படத்தில் நடித்து கதாநாயகியாக தமிழ் சினிமாவில் சௌந்தர்யா அறிமுகமானார்.

தொடர்ந்து விஜயகாந்துடன் தவசி சொக்கத்தங்கம் ரஜினியுடன் அருணாச்சலம் படையப்பா கமலுடன் காதலா காதலா அம்மன் உள்ளிட்ட பல படங்களில் சௌந்தர்யா நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். கடந்த 1972ம் ஆண்டு ஜூலை 18ம் தேதி கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் சத்தியநாராயணா மஞ்சுளா தம்பதிக்கு மகளாக சௌந்தர்யா பிறந்தார்.

- Advertisement -

பெங்களூருவில் மருத்துவ படிப்பு படித்த சௌந்தர்யா முதல் ஆண்டுக்குப் பிறகு படிப்பை தொடராமல் சினிமா ஆர்வம் காரணமாக நடிக்க வந்துவிட்டார். கடந்த 2003ம் ஆண்டில் தனது தாய் வழி உறவினர் சாப்ட்வேர் இன்ஜினியர் ரகு என்பவரை சௌந்தர்யா திருமணம் செய்து கொண்டார். பாஜக ஆதரவாளராக இருந்த நடிகை சௌந்தர்யா கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி ஹெலிகாப்டரில் பயணித்த போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தார்.

தனது சகோதரர் அமர்நாத் என்பவருடன் கரீம் நகரில் இருந்து பெங்களூருவுக்கு சௌந்தர்யா ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்ட போது இந்த துயர சம்பவம் நடந்தது. 31 வயதில் மறைந்த நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாறு, பயோபிக் விரைவில் உருவாக உள்ளது. இந்த படத்தில் சௌந்தர்யா கேரக்டரில் நடிக்க நேஷனல் கிரஷ் நடிகை ராஷ்மிகா மந்தனா விருப்பம் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறுகையில், சிறு வயது முதலே நான் சௌந்தர்யாவை போல் இருப்பதாக என் தந்தை அடிக்கடி சொல்லுவார். என் மனதில் மிக ஆழமாக அது பதிந்து விட்டது. அதனால் நடிகை சௌந்தர்யா பயோபிக்கில் நடிக்க நான் மிகவும் விருப்பமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல் நடிகை பிரியங்கா மோகனும் சௌந்தர்யா பயோபிக் படத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அழகிலும் நடிப்பிலும் சௌந்தர்யாவை யாராலும் மறக்கவே முடியாது. அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது பயோபிக் உருவானால் அதில் சௌந்தர்யாக நடிக்க மிகவும் விரும்புகிறேன் என்று கூறியிருக்கிறார். முன்னணி நாயகிகளான ராஷ்மிகா மந்தனா பிரியங்கா மோகன் இருவரும் மறைந்த நடிகை சௌந்தர்யா பயோபிக்கில் நடிக்க ஆர்வமாக உள்ள நிலையில், இருவரில் யாருக்கு வாய்ப்பு என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்