- Advertisement -
Homeபொழுதுபோக்குவிமான விபத்தில் இருந்து கடைசி நேரத்தில் தப்பித்த நடிகை ராஷ்மிகா மந்தனா - இது ஷூட்டிங்...

விமான விபத்தில் இருந்து கடைசி நேரத்தில் தப்பித்த நடிகை ராஷ்மிகா மந்தனா – இது ஷூட்டிங் உருட்டல்ல, அவர் உயிர் பிழைத்த உண்மை சம்பவம்

- Advertisement -

நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு இப்போது நேஷனல் கிரஷ் என்ற புதிய அடைமொழி ஒன்று கிடைத்திருக்கிறது. ஏனென்றால் எல்லோருமே விரும்பும் ஒரு பெண்ணாக அவர் மாறியிருக்கிறார். கீதா கோவிந்தம் படம் அவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. புஷ்பா, எல்லா தரப்பு ரசிகர்களிடமும் அவரை கொண்டு போய் சேர்த்தது. இன்கேம் இன்கேம் காவாலி பாடல் ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிய வரவேற்பை தந்தது.

இந்நிலையில் விமான விபத்தில் இருந்து ராஷ்மிகா நூலிழையில் தப்பித்த சம்பவம் நடந்துள்ளது. இந்தியாவின் முன்னணி தொழில்துறை குழுமங்களில் முதன்மையானதாக டாடா குழுமம் இருந்து வருகிறது. இந்த டாடா தொழில்துறை குழுமத்தின் வாயிலாக, விமான போக்குவரத்து சேவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. விஸ்டாரா என்ற பெயரில் அந்த நிறுவனம் விமான போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வருகிறது.

- Advertisement -

விஸ்டாரா நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், மும்பையில் இருந்து ஐதரபாத்துக்கு நூற்றுக்கணக்கான பயணிகளுடன் புறப்பட்டுச் சென்றது. மும்யைில் இருந்து விமானம் புறப்பட்ட 30 நிமிடங்களில், திடீரென விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் பீதியில் உறைந்து போயினர். அந்த பயணிகளில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ஒருவர்.

இந்த சூழலில் துரிதமான செயல்பட்ட விமான பைலட், உடனடியாக விமானத்தை மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்துக்கு திருப்பி பத்திரமாக தரையிறக்கினார். இதனால் விமானம் விபத்தில் இருந்து தப்பியது. விமானத்தில் இருந்த நூற்றுக்கணக்கான பயணிகளும், 10க்கும் மேற்பட்ட விமான பணிப் பெண்களும் ஆபத்தின்றி உயிர் தப்பினர்.

- Advertisement -

விமானத்துக்குள் உயிர் பயத்தில் சிக்கித் தவித்த ராஷ்மிகா மந்தனா, விமானம் தரையிறக்கப்பட்டு விமானத்தில் இருந்து வெளியேறிய பின், தனது இணையதள பக்கத்தில் மரணத்தில் இருந்து இப்படிதான் தப்பினோம் என, தனது புகைப்படத்துடன் பதிவிட்டு இருக்கிறார். இந்த விமானத்தில் நடிகை ஷரத்தா தாஸ்சும், ராஷ்மிகாவுடன் பயணித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமானத்தில் ஏற்பட்ட கோளாறு சரிசெய்யப்பட முடியாமல் நீண்ட நேரம் ஆனதால், மாற்று விமானத்தில் அந்த பயணிகள் அனைவரையும் ஐதராபாத் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ராஷ்மிகாவின் பதிவு வைரலானதை தொடர்ந்து, அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரை நலம் விசாரித்து பதிவுகளை செய்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்