- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜய் படம் பார்க்கலேன்னா எனக்கு தூக்கமே வராது, அதனால் விஜயை அங்கேயே அனுப்பிடுவோம் - குசும்பாக...

விஜய் படம் பார்க்கலேன்னா எனக்கு தூக்கமே வராது, அதனால் விஜயை அங்கேயே அனுப்பிடுவோம் – குசும்பாக பேசிய திமுக ஆதரவாளர் நடிகர் சத்யராஜ்!

- Advertisement -

சென்னை பெரம்பூர் தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட நடிகர் சத்யராஜ் பேசியதாவது, நடிகர் விஜய் இந்த தொகுதியில் விசில் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்கின்றனர். ஆனால் உண்மையில் அவர் தாமரை சின்னத்தில்தான் போட்டியிடுகிறார். அரசியல் தெரியாமல் பேசுகின்றனர். உதயசூரியனை தவிர்த்து யாருக்கு ஓட்டு போட்டாலும் அது தாமரைக்கு தான் போகும்.

இந்த தேர்தலில் தமிழ்நாட்டுக்கும் டெல்லிக்கும் தான் போட்டி. இதில் டெல்லியை நாம் தமிழ்நாட்டுக்குள் நுழையவே விடக் கூடாது. எனக்கு அவர் நெருங்கிய நண்பர். அவருக்கும் நான் நெருங்கிய நண்பர். அவரது படங்களை நான் ரொம்ப விரும்பி பார்க்கிறவன். அது என்னுடைய அன்பு தம்பி விஜய் அவர்கள்தான்.

- Advertisement -

இப்போது கில்லி படம் மறுபடியும் வந்த போதுகூட என் பேரப் பசங்களோடு உட்கார்ந்து கில்லி படத்தை விரும்பி பார்த்து ரசிச்சேன். அப்பேர்ப்பட்ட நல்ல நடிகர் விஜய் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் கிடையாது. ஆனால் ஒரு சிலரை எதுக்காக நமக்கு பிடிக்குதுன்னு தெரிஞ்சு வைச்சுக்கணும்.

நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்ததால் மகாத்மா காந்தியை எல்லோருக்கும் பிடிக்கும். பகுத்தறிவு சிந்தனைகளை ஊட்டி வளர்ந்த பெரியாரை நமக்கு பிடிக்கும். அதே போல் பேரறிஞர் அண்ணாவை பிடிக்கும். கலைஞரை பிடிக்கும். அப்படி நமக்கு பிடித்தவர்கள் என்ன காரணத்தால் நமக்கு பிடித்ததோ அவர்கள் அங்கேயே இருந்தால் தான் நமக்கு நல்லது.

- Advertisement -

நடிகர் விஜயை நமக்கு ஏன் பிடிக்கிறது? அழகாக இருக்கிறார். நல்லா டான்ஸ் பண்றார். சூப்பரா பைட் பண்றார். அவர் படங்கள் பார்த்தா ஜாலியா இருக்கும். அதனால் தான் நமக்கு அவரை பிடிக்கிறது. அப்போ நாம என்ன பண்ணனும்? அவர் சினிமாவிலேயே நடிச்சிட்டு இருக்கிற மாதிரி பண்ணனும். அப்போ தானே நமக்கு சந்தோஷம் கிடைக்கும்?

எனக்கு விஜய் படம் பார்க்காமல் தூக்கம் வராது. அவர் பாட்டுக்கு அரசியலுக்கு வந்தால் நான் என்ன பண்றது? எனக்கு அவர் சினிமாவிலேயே நடிச்சிட்டு இருக்கணும். அதனால் அவரை மறுபடியும் சினிமாவுக்கே அனுப்பிச்சு விட்டுடணும். அப்படி போனாத்தானே அவர் நடிச்சிட்டு இருப்பார். நமக்கும் பொழுதுபோக்காக இருக்கும் என்று நடிகர் சத்யராஜ் தனக்கே உரிய பாணியில் விஜயை கலாய்த்து நக்கலாக பேசியிருக்கிறார். இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்