- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குநர் அட்லீ இயக்கத்தில், அந்த நடிகர் நடிப்பது உண்மையா - இருவரது மும்பை சந்திப்பு மர்மம்...

இயக்குநர் அட்லீ இயக்கத்தில், அந்த நடிகர் நடிப்பது உண்மையா – இருவரது மும்பை சந்திப்பு மர்மம் குறித்து வெளிவந்த உண்மை

- Advertisement -

கடந்த 20, 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, படத்தில் நடிக்கும் ஹீரோ நடிகர்கள்தான் ரசிகர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றிருந்தனர். யார் நடித்த படம் என்பது மட்டுமே, ரசிகர்களின் கண்ணோட்டமாக இருந்தது. படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் குறித்து எல்லாம், ரசிகர்கள் யோசிக்க கூட மாட்டார்கள்.

ஆனால் இப்போது நடிகர்களை போலவே, இயக்குநர்களும் முக்கியத்துவம் பெற்றவர்களாக பார்க்கப்படுகின்றனர். இதனால், ரசிகர்களின் அபிமானம் பெற்ற இயக்குநர்களின் படத்தில் நடிப்பதே, நடிகர்களின் பாதி வெற்றியாக விடுகிறது. அதுபோல், மாஸ் ஹீரோக்களை வைத்து படம் பண்ணுவதே, இயக்குநர்களுக்கு பெரிய வெற்றியாக தெரிகிறது. இதில் பெரும்பாலும் ஹீரோக்களுக்கான கதையாக மட்டுமே அந்த படங்கள் உருவாக்கப்படுகிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய கசப்பான உண்மை.

- Advertisement -

இந்நிலையில், பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கியவர் இயக்குநர் அட்லீ. ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் போன்ற தமிழ் படங்களை இயக்கிய அட்லீ, இந்தி படவுலகில், பாலிவுட் மெகா ஸ்டார் ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கினார். நயன்தாராவும் ஷாருக்கான ஜோடியாக நடித்தார். படமும் மாஸ் ஹிட் ஆகி, இப்போது வசூலில், ஆயிரம் கோடி ரூபாயை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அதே போல், புஷ்பா படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற அல்லு அர்ஜூன் புகழ் கொடி கட்டிப் பறக்கிறது. புஷ்பா 2்ம் பாகம், அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி வெளியாகி உள்ளது. புஷ்பா முதல் பாகம் போலவே, 2ம் பாகமும் மெகா ஹிட் அடித்தால், அல்லு அர்ஜூன் வேற லெவலில் சினிமாவில் இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

இந்நிலையில், மும்பையில் இயக்குநர் அட்லீயும், அல்லு அர்ஜூனும் சந்தித்து பேசிக்கொண்டதாகவும், அடுத்த படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் பரவியது. ஆனால் உண்மையில் அப்படி ஒரு சம்பவம் எதுவுமே நடக்கவில்லை எனவும், மும்பையில் அட்லீ – நடிகர் அல்லு அர்ஜூன் சந்திப்பு எதுவும் நடக்கவில்லை என்பதும் உறுதியாகி உள்ளது. இது, நடிகைகளின் திருமணம் போலவே, யாரோ கிளப்பிவிட்ட வதந்தி என்பதும் தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்