- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போ என்னோட ரேஞ்சே வேற, நடிச்சா ஹீரோ ரோல்தான்- பிரபல தயாரிப்பாளரை கலங்கடித்த சரத்குமார், ஓஹோ...

இப்போ என்னோட ரேஞ்சே வேற, நடிச்சா ஹீரோ ரோல்தான்- பிரபல தயாரிப்பாளரை கலங்கடித்த சரத்குமார், ஓஹோ கதை அப்படி போகுதா?

- Advertisement -

சரத்குமார், அசோக் செல்வன் ஆகியோரின் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான “போர் தொழில்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தமிழ் சினிமாவில் மிக வித்தியாசமான கிரைம் திரில்லர் திரைப்படம் என்று பலரும் இத்திரைப்படத்தை பாராட்டினார்கள்.

சரத்குமார் சமீபத்தில் ஹீரோவாக நடித்த எந்த திரைப்படங்களும் சரியாக போகவில்லை. ஆதலால் பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். ஆனால் “போர் தொழில்” திரைப்படம் அவருக்கு ஹீரோவாக ஒரு கம்பேக்கை கொடுத்துள்ளது. மேலும் தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் சரத்குமார்.

இந்த நிலையில் “சூரியன்”, “ஜென்டில் மேன்”, “காதலன்”, “காதல் தேசம்”, “ரட்சகன்” போன்ற பல வெற்றித் திரைப்படங்களை தயாரித்த கே.டி.குஞ்சுமோன், “ஜென்டில் மேன் 2” திரைப்படத்தை தற்போது தயாரிக்க உள்ளார். இத்திரைப்படத்தின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. “ஜென்டில்மேன்” திரைப்படத்தின் மூலம் ஷங்கரை அறிமுகப்படுத்தியவர் இவர்தான். அத்திரைப்படம் அர்ஜூனுக்கும் மிகப் பெரிய திருப்புமுனையை கொடுத்தது.

அதே போல் அவர் தயாரித்த “சூரியன்” திரைப்படம் ஒரு ஹீரோவாக சரத்குமாருக்கு மிகப் பெரிய திருப்புமுனையை தந்தது. அந்த வகையில் இவர்களோடு பலருக்கும் அந்த விழாவிற்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தாராம் குஞ்சுமோன். ஆனால் இவர்களில் யாருமே அந்த விழாவிற்கு வரவில்லையாம்.

அதே போல் “ஜென்டில் மேன் 2” திரைப்படத்தில் சரத்குமாரை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று குஞ்சுமோன் சரத்குமாரை அணுகினாராம். அவரும் சரி என்று கூறியிருந்தாராம். ஆனால் இப்போது சரத்குமாரோ, “போர் தொழில் வந்ததற்கு பிறகு தனது மார்க்கெட் அதிகரித்து விட்டது, ஆதலால் இனி குணச்சித்திர வேடத்தில் நடித்தால் சரி வராது” என்று கூறிவிட்டாராம். இதனால் குஞ்சுமோன் மிகவும் கவலைப்பட்டாராம்.

சற்று முன்