நடிகர் ரஜினிகாந்த் இப்போது ஜெயிலர் 2 படத்தை நடித்து முடித்திருக்கிறார். அடுத்து தலைவர் 173 என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் நடிகர் கமல்ஹாசனே சொந்தமாக தயாரிக்கிறார். ஆனால் இந்த படத்தில் இயக்குனர் சிபி சக்ரவர்த்தியா, அஸ்வத் மாரிமுத்துவா என்பதில் குழப்பம் நீடித்து வருகிறது.
தலைவர் 173 படத்துக்கு பிறகு நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு இந்த 2 ஜாம்பவான்களும் இணைந்து நடிக்கும் இந்த படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை இயக்கப் போவது ஜெயில் ஜெயிலர் 2 படங்களின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார். இந்த படத்துக்கும் இசையமைக்க போவது அனிருத் தான்.
ரஜினி கமல் இருவரும் ஆரம்ப காலத்தில் நிறைய படங்களில் இணைந்து நடித்திருக்கின்றனர். குறிப்பாக ரஜினி நடிக்க வந்த புதிதில் கமலுடன் 16 வயதினிலேயே மூன்று முடிச்சு அபூர்வ ராகங்கள் அலாவுதீனும் அற்புத விளக்கும் நினைத்தாலே இனிக்கும் என பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார். ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு இனி இணைந்து நடிக்க வேண்டாம் என அவர்களே முடிவு செய்து விட்டனர்.
தனித்தனியாக நடித்தால் தான் பெரிய வளர்ச்சியை காண முடியும். சம்பளமும் அதிகமாக பெற முடியும் என்கிற நிலையில் அவர்கள் தனித்தனியாக படங்களில் நடிக்க ஆரம்பித்து நட்சத்திர நடிகர்களாக மாறிவிட்டனர். ஆனால் மீண்டும் ரஜினி கமல் இணைந்து நடிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகவே ரசிகர்கள் விரும்பிய நிலையில் இப்போது அதற்கான சூழல் அமைந்துள்ளது.
இந்நிலையில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தின் டிஜிட்டல் விற்பனை குறித்து அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்தினம் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. பான் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்துக்கு ரெட் ஜெயிண்ட் நிறுவனம் ரூ. 250 கோடி என டிஜிட்டல் உரிமத்துக்கான விலை என பேசியுள்ளது.
ஆனால் நெட்பிளிக்ஸ் நிறுவனம் இறுதியாக 110 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளது. இதற்கு ரெட் ஜெயிண்ட் நிறுவனம் சம்மதிக்கவில்லை. ரஜினி கமல் என்ற 2 பெரிய ஜாம்பவான்கள் நடிக்கும் படத்துக்கே இவ்வளவுதான் விலையா என தமிழ் சினிமா ரசிகர்கள் பலத்த அப்செட்டில் உள்ளனர். ரூ. 250 கோடிக்கு ரூ. 110 கோடி என்பது பாதி கூட இல்லையே என்றும் புலம்புகின்றனர்.





