- Advertisement -
Homeபொழுதுபோக்குமிரட்டினால் நான் பின்வாங்க மாட்டேன், என்னை அமைதிப்படுத்த முடியாது, நான் எந்த எல்லைக்கும் செல்வேன் -...

மிரட்டினால் நான் பின்வாங்க மாட்டேன், என்னை அமைதிப்படுத்த முடியாது, நான் எந்த எல்லைக்கும் செல்வேன் – அம்மா சங்க தலைவர் ஸ்வேதா மேனன் உறுதி!

- Advertisement -

மலையாள சினிமாவில் உள்ள நடிகர் நடிகைகளின் பாதுகாப்பு மற்றும் நலனுக்காக அம்மா சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அம்மா சங்கத்துக்கு நடந்த தேர்தலில் நடிகை ஸ்வேதா மேனன் வெற்றி பெற்று தலைவரானார். அம்மா சங்க வரலாற்றில் முதன் முறையாக பெண் தலைவராக ஸ்வேதா மேனன் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நடந்த சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகை ஸ்வேதா மேனன் உள்ளிட்ட 17 நிர்வாகிகள் தங்களது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தனர். இதையடுத்து அட் – ஹாக் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் அம்மா சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து விலகவில்லை என்று அறிவித்த ஸ்வேதா மேனன் இதுகுறித்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

- Advertisement -

இந்த வழக்கை விசாரித்த எர்ணாகுளம் முன்சீப் நீதிமன்றம் அட் – ஹாக் கமிட்டி செயல்பாடுகளுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில் தன்னுடைய போராட்டம் யாருக்கு எதிரானது என்பது குறித்து நடிகை ஸ்வேதா மேனன் தற்போது விளக்கம் தந்து உள்ளார். இதுகுறித்து அம்மா சங்கத்தின் தலைவர் ஸ்வேதா மேனன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, ஹேமா கமிட்டி அறிக்கையின் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அந்த பவர் குரூப்புக்கு எதிரானது என்னுடைய போராட்டம்.

அவர்கள் என்னை அவமதிக்கவும் பதவியில் இருந்து அகற்றவும் முயன்றனர். அவர்களால் பாதிக்கப்பட்டவர்களின் பக்கத்தில் எப்போதும் நின்று இருக்கிறேன். நான் எழுப்பிய உண்மையான பிரச்சினைகள் மறைக்கப்பட்டு என்னைப் பற்றிய பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன. ஒரு தேசியக் கட்சி எனக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டின் பின்னணி என்ன என்பதை யாராவது விளக்க முடியுமா?

- Advertisement -

நான் ஏதேனும் அரசியல் கட்சியை சேர்ந்தவராக இருந்தால் அதை ஏன் மறைக்க வேண்டும்? என்னை தொடர்ந்து அவதூறாக பேசுபவர்களிடம் நான் வைக்கும் வேண்டுகோள் இதுதான். அரசியல் மதம் வகுப்பு வாதம் போன்றவற்றை அம்மா சங்கத்துக்குள் கொண்டு வராதீர்கள். மலையாள மக்கள் சாதி மதம் அரசியல் எல்லைகளை கடந்து தான் கலைஞர்களை நேசிக்கின்றனர்.

நான் இருக்கும் வரை ஹேமா கமிட்டி அறிக்கையில் கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் யாரும் அம்மா சங்கத்தின் முக்கிய பொறுப்புக்கு வர முடியாது. அதை உறுதி செய்ய எந்த எல்லைக்கும் செல்ல தயார். என்னை மிரட்ட முடியாது. என்னை அமைதியாக்க முடியாது. நான் சரணடையவோ பின்வாங்கவோ மாட்டேன் என்று நடிகை ஸ்வேதா மேனன் என்று அந்த பதிவில் உறுதியாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்