- Advertisement -
Homeபொழுதுபோக்கு85 கோடி ரூபாய் வசூலித்த யூத் படம் - படத்தை டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த...

85 கோடி ரூபாய் வசூலித்த யூத் படம் – படத்தை டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த கென் கருணாஸ் சம்பளம் இவ்வளவுதானா?….

- Advertisement -

தமிழ் சினிமாவில் இந்த 2026ம் ஆண்டில் வெளியான படங்களில் 2 படங்கள்தான் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு அதிக லாபத்தை பெற்ற படங்களாக இருக்கின்றன. அதில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா சரத்குமார் நடித்த தாய்கிழவி. மற்றொன்று நடிகர் கென் கருணாஸ் இயக்கி நடித்த யூத் படம்தான்.

கென் கருணாஸ் ஆரம்பத்தில் நெடுஞ்சாலை உள்ளிட்ட சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிறகு இயக்குனர் வெற்றிமாறனிடம் சில படங்களில் உதவி இயக்குனராக பணிசெய்தார். அசுரன் விடுதலை 2 போன்ற படங்களிலும் அவர் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் கென் கருணாஸ் முதன் முறையாக டைரக்ட் செய்து ஹீரோவாக நடித்த படம் யூத். இந்த படம் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை வெற்றியை பெற்றது. மொத்தம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் உலக அளவில் மொத்தம் 85 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.

அந்த வகையில் இந்த படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கு லாபமாக ரூ. 30 கோடி வரை கிடைத்துள்ளது. ஆனால் யூத் படத்தை இயக்கி அந்த படத்தில் ஹீரோவாக நடித்த கென் கருணாஸ் சம்பளம் வெறும் 5 லட்சம் ரூபாய்தான் என்பது இப்போது தெரிய வந்துள்ளது. மேலும் பிராபர்டி ஷேர் அடிப்படையில் மேலும் ரூ. 2 கோடி அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஒரு படத்தை அறிமுக இயக்குனராக டைரக்ட் செய்து கென் கருணாஸ் இயக்குனராக வெற்றி பெற்றிருக்கிறார். அத்துடன் அவரது கதையில் அவரே முதன்முறையாக ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்திருக்கிறார். அப்படிப்பட்ட படத்தின் மொத்த வெற்றிக்கு பக்கபலமாக இருந்த கென் கருணாஸ் சம்பளம் ரூ. 5 லட்சம் என்பது ரசிகர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.

முதல் படம் என்பதால் கென் கருணாஸ், குறைந்த சம்பளத்தில் நடிக்க முதலில் சம்மதித்து இருக்கலாம். ஆனால் 85 கோடி ரூபாய் வரை பெரிய வசூலை அடைந்த நிலையில், இதில் 5 கோடி ரூபாய் என்கிற அளவிலானது படத்தின் நாயகன் டைரக்டர் கென் கருணாஸ்க்கு வழங்க தயாரிப்பாளர் முன்வந்திருக்க வேண்டும். இதற்கும் அவர் கென் கருணாஸின் நெருங்கிய நண்பர் என்கின்றனர். இதுகுறித்து அவரது அப்பா லொடுக்கு பாண்டி இன்னும் வாய் திறக்காதது ஏன்? தன் மகனுக்காக களத்தில் கருணாஸ் இறங்குவாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்