கடந்த சில தினங்களாக தேர்தல் குறித்த செய்திகளை காட்டிலும் தமிழ் சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு விஷயம் பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் இசையமைப்பாளர் ஒருவர் மீது கூறியிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் தான். இசையமைப்பாளர் பெயரை குறிப்பிடாமல் அவர் கூறியிருக்கும் தகவல்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான மாயா கிருஷ்ணன் சகோதரி தான் ஸ்வாகதா கிருஷ்ணன். திரைப்பட பின்னணி பாடகியான இவர் சில படங்களில் பாடல்களை பாடியிருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில், ஒரு இசையமைப்பாளரிடம் பல ஆண்டுகள் பணி செய்ததாகவும் அவர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் கூறினார்.
மேலும் அவர் தன்னிடம் கடன் என்ற பெயரில் பணம் பறித்ததாகவும் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றியதாகவும் மேலும் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்த போது அதை காமிராவில் பதிவு செய்து மிரட்டியதாகவும் கூறியிருந்தார். ஆனால் கடைசி வரை அந்த இசையமைப்பாளர் பெயரை பாடகி ஸ்வாகதா கூறவே இல்லை.
இதுகுறித்து பாடகி ஸ்வாகதா கிருஷ்ணனுக்கு ஆதரவாக பதிவு செய்திருந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன், அந்த இசையமைப்பாளர் யார் என்று ஸ்வாகதா கிருஷ்ணன் அவரே வெளிப்படையாக சொல்ல வேண்டும். ஆனால் நாம் இதை வற்புறுத்த முடியாது. அதே நேரத்தில் அந்த இசையமைப்பாளரின் காம வேட்டை இன்றும் தொடர்கிறது என்று குறிப்பிட்டு இருந்தார். இதுவும் வைரலானது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி ஒரு வீடியோவில் கூறியிருப்பதாவது, கடந்த ஒரு வாரமாக பாடகி சின்மயியை காணவில்லை என்கின்றனர். அந்த தகவல் கேள்விப்பட்டீங்களா? ஆனால் அதுகுறித்து போலீசில் எதுவும் புகார் தரப்படவில்லை. ஆனால் ஒருவாரமாக காணவில்லையாம்.
இளம் பாடகி ஸ்வாகதா என்பவர் ஒரு இசையமைப்பாளர் குறித்து பேட்டி கொடுத்திருக்காங்க. அந்த நபர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஸ்வாகதா பேசிய விஷயங்கள் பெரிய அளவில் வைரலாகி விட்டது. அந்த இசையமைப்பாளர் அவரா, இவரா என்ற குழப்பமான கேள்வியும் இருந்து வருகிறது. எதற்கெல்லாமோ குரல் கொடுத்து கொடி பிடித்து எதிர்ப்பு தெரிவிக்கும் பாடகி சின்மயி, அவர் சார்ந்துள்ள ஒரு துறையில் ஒரு பாடகிக்கு நேர்ந்துள்ள இந்த பிரச்னை குறித்து பேசாமல் எங்கே போனார்? ஏன் பேசவில்லை என்று ஜெ பிஸ்மி அந்த வீடியோவில் பேசியிருக்கிறார்.





