தமிழ் சினிமாவில் நாளைய தீர்ப்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆன போதே பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தவர் நடிகர் விஜய். இது எல்லாம் ஒரு முகமா என்று தியேட்டரில் படம் பார்த்த சிலர் விஜய் காதுபடவே உருவக்கேலி செய்து பேசிய சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதே போல் ஆரம்பத்தில் விஜய் நடித்த சில படங்கள் சரியாகவும் போகவில்லை.
ஆனால் தோல்வியை கண்டு துவளாமல் விமர்சனங்களை கேட்டு மனம் முடங்காமல் தன் மீதும் தன் திறமை மீதும் உழைப்பின் மீதும் நம்பிக்கை வைத்த விஜய் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். ஆரம்பத்தில் காதல் படங்களிலும் பிறகு ஆக்சன் படங்களிலும் நடித்து முன்னணி ஹீரோவாக மாறினார்.
ஒருகட்டத்தில் நட்சத்திர ஹீரோவாக உச்சம் தொட்ட விஜய் கடந்த 2024ம் ஆண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கி தமிழக அரசியல் களத்தில் குதித்தார். விஜய் மற்றும் அவரது கட்சியினரை தற்குறி கூட்டம் என்று பலரும் விமர்சித்த நிலையில், சட்டசபை தேர்தலை தனித்து சந்தித்த விஜய் 108 இடங்களில் வெற்றி பெற்று இன்று தமிழக முதல்வராக 3 மாதங்கள் ஆட்சியும் செய்து விட்டார்.
இதற்கிடையே விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்ததும் அதில் நடிகை ஒருவருடன் விஜய் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாகவும் புகார் தெரிவித்திருந்தார். இது பலத்த சர்ச்சையாக மாறிய போதிலும் விஜயின் அரசியல் பயணத்தில் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்த சூழலில் நேற்று சங்கீதா, செங்கல்பட்டு கோர்ட்டில் தனது விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற நிலையில் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. தனது கணவர் தமிழகத்தின் முதல்வர் என்பதாலும் தனது பிள்ளைகளின் எதிர்காலம் கருதியும் இந்த விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுவதாக கூறி சங்கீதா விவாகரத்து மனுவை வாபஸ் பெற்றதாக தெரிய வருகிறது.
விஜய் சங்கீதா இருவரும் தற்காலிகமாக பிரிந்து வாழ்கின்றனர். கடந்த 1999ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி விஜய் சங்கீதா திருமணம் செய்த நிலையில் வருகிற 25ம் தேதி அவர்களது 27ம் ஆண்டு திருமண நாளாகும். அந்த நாளில் விஜய் சங்கீதா இருவரும் இணைந்த தகவல் வெளியானால் நன்றாக இருக்கும். அப்படி ஒரு தரமான சம்பவம் நடக்குமா என்ற தவெக கட்சியினரும் தளபதி ரசிகர்களும் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.





