- Advertisement -
Homeபொழுதுபோக்குவில்லன் நடிகர் ரகுவரனை கடைசி வரை தனது படத்தில் நடிக்க அனுமதிக்காத அந்த பிரபல நடிகர்...

வில்லன் நடிகர் ரகுவரனை கடைசி வரை தனது படத்தில் நடிக்க அனுமதிக்காத அந்த பிரபல நடிகர் – அதுக்கு பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா?

- Advertisement -

நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷ நடிகர் என்றால் அது மிகையல்ல. தனிப்பட்ட வாழ்வில் அவர் மதுபானம் அருந்துபவர், போதை பழக்கங்களுக்கு ஆளானவர் என்பதை எல்லாம் கடந்து, ஒரு சினிமா கலைஞனாக, நடிகராக அவர் தொட்ட உச்சங்களை, இன்னும் எந்த நடிகரும் தொடவில்லை. அவரது இடம் இன்னும் காலியாகவே உள்ளது.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் சிதம்பரம் கேரக்டர், பாட்ஷா படத்தில் மார்க் ஆண்டனி கேரக்டர், புரியாத புதிர் படத்தில், ரேகாவின் சைக்கோ கணவர் கேரக்டர், காதலன் படத்தில் அவர் நடித்த வில்லன் கேரக்டர் என எந்த கேரக்டராக இருந்தாலும், ரகுவரனின் நடிப்பு என்பது தனித்துவம் மிக்கதாகவே இருந்திருக்கிறது.
துவக்கத்தில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த ரகுவரன் ஒரு கட்டத்துக்கு பிறகு வில்லன் நடிகராக மாறினார். குறிப்பாக ரஜினி படங்கள் என்றாலே அங்கு வில்லனாக ரகுவரன்தான் இருப்பார். இதற்கு முக்கிய காரணம், ரகுவனை ரஜினிக்கு மிகவும் பிடிக்கும். இப்போதும் ரகுவரன் இருந்திருந்தால் அண்ணாத்த படத்திலும், ஜெயிலர் படத்திலும் அவர் வில்லனாக நடித்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

தமிழ் சினிமாவில் முதன்முறையாக கேரவன் வேன் பயன்படுத்திய பெருமை ரகுவரனுக்குதான் உண்டு. எந்த ஊருக்கு சென்றாலும் அவர் காரில் பயணிக்க மாட்டார். பெரும்பாலும் அவரது சொந்த கேரவன் வேனில்தான் செல்வார். அதே போல் ஒரு கேரக்டரில் நடித்தால், வீட்டில் இருக்கும்போது தன்னை அந்த கேரக்டராகவே பாவித்துக்கொண்டு மற்றவர்களிடம் பேசுவார், நடந்துக்கொள்வார் என்பதும் ஆச்சரியம் தரும் விஷயம்தான்.

வில்லன் கேரக்டரில் தொடர்ந்து நடித்த ரகுவரன் ஒரு கட்டத்தில் கேரக்டர் நடிகராக மாறினார். விஜய் நடித்த லவ்டுடே, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி, அஜீத் நடித்த முகவரி, சிவாஜி படத்தில் இறந்த ரஜினியை உயிர் பிழைக்க வைக்கும் டாக்டர் கேரக்டர் என சிறந்த நடிப்பை தந்துக்கொண்டிருந்த ரகுவரன், 49 வயதிலேயே இறந்து போனார். தீவிர சாய்பாபா பக்தரான அவரது மனைவி நடிகை ரோகிணி. ஆனால், திருமணமான 6 ஆண்டுகளிலேயே அவரும் பிரிந்துவிட்டார். 49 வயதிலேயே ரகுவரனின் மறைவுக்கு தனிமை ஒரு முக்கிய காரணம்.

- Advertisement -

இவ்வளவு திறமை வாய்ந்த சிறந்த நடிகரை, கடைசி வரை தனது படத்தில் நடிக்க அனுமதிக்காத, விரும்பாத ஒரே நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன்தான். ஏனெனில் ஒரே காட்சியில், தனது திறம்பட்ட நடிப்பால் ரகுவரன் கமல்ஹாசனை ஓரம்கட்டி விடுவார் என்ற பயம்தான் அதற்கு காரணம். ஏனெனில் கமலுக்கு தன்னை மிஞ்சிய நடிகன் தன் படத்தில் இருந்துவிடக் கூடாது என்பதுதான் எண்ணம். அத்துடன் ரகுவரன், ரஜினிக்கு வில்லன் என்ற முத்திரை இருந்ததும் மற்றொரு காரணமாக இருந்திருக்கலாம்.

- Advertisement -

சற்று முன்