- Advertisement -
Homeபொழுதுபோக்குகருப்பு பட விழாவுக்கு வராமல் ஆப்சென்ட் ஆன படத்தின் நாயகி நடிகை திரிஷா - ஆர்ஜே...

கருப்பு பட விழாவுக்கு வராமல் ஆப்சென்ட் ஆன படத்தின் நாயகி நடிகை திரிஷா – ஆர்ஜே பாலாஜிதான் காரணமா? கோபத்தை வெளிப்படுத்திய குந்தவை!

- Advertisement -

நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான படம் கருப்பு. இந்த படத்தில் நாயகனாக சூர்யா நாயகியாக திரிஷா நடித்துள்ளனர். மேலும் லப்பர் பந்து சுவாசிகா ஷிவதா நாயர் நட்டி நடராஜ் யோகிபாபு மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இதில் வில்லன் கேரக்டரில் ஆர்ஜே பாலாஜியும் நடித்துள்ளார்.

வருகிற 14ம் தேதி கருப்பு படம் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன்பு கருப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் நடிகர் சூர்யா இயக்குனர் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றனர். ஆனால் படத்தின் நாயகி நடிகை திரிஷா இந்த விழாவுக்கு வரவில்லை.

- Advertisement -

இதனால் அந்த விழாவுக்கு வந்த ரசிகர்கள் பலத்த ஏமாற்றமடைந்தனர். ஏனெனில் நடிகை திரிஷாவுக்கு என தமிழ்நாட்டில் பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. ஏற்கனவே கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்ஜே பாலாஜிக்கும் நடிகை திரிஷாவுக்கும் படப்பிடிப்பு தளத்தில் மோதல் ஏற்பட்டதாகவும் இருவரும் பல நாட்களாக பேசிக்கொள்ளவில்லை என்றும் அப்போதே தகவல் கசிந்தது.

இந்நிலையில் அந்த உரசல் காரணமாக தான் கருப்பு இசை வெளியீட்டு விழாவுக்கு படத்தின் நாயகி நடிகை திரிஷா தவிர்த்து விட்டார் என்றும் ரசிகர்கள் மத்தியில் பேச்சு எழுந்தது. இந்நிலையில் திரிஷாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர், கருப்பு பட ஆடியோ லாஞ்சுக்கு ஏன் போகவில்லை என்று கேள்வி எழுப்ப, அதற்கு திரிஷா எனக்கு அழைப்பே வரலீங்க என்று பதில் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இது இணையத்தில் வைரலான நிலையில் இப்போது கருப்பு படக்குழு சார்பில் ஒரு டீசர் வெளியிட்டுள்ளனர். அதில் நடிகை திரிஷாவை மட்டுமே மையப்படுத்தி இருக்கின்றனர். அதைப் பார்த்த ரசிகர் ஒருவர், படத்தில் திரிஷா இருப்பதையே மறந்து விட்டேன் என்று கமெண்ட் செய்து பதிவிட்டுள்ளார்.

அந்த ரசிகரின் கமெண்டுக்கு பதில் தந்துள்ள நடிகை திரிஷா, நானும் மறந்துவிட்டேன். இப்போதாவது அவர்கள் ரிமைண்டர் செட் செய்தார்களே? என்று அதில் கூறியிருக்கிறார். தமிழ் சினிமாவில் 23 ஆண்டுகளாக முன்னணி நாயகியாக உள்ள திரிஷாவையே கருப்பு படத்தில் இருட்டடிப்பு செய்கிறார்களே? புதுமுக நடிகைகளின் நிலை என்ன என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்