- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டு, நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கே இப்படி ஒரு நிலமையா?...

நடிகர் விஷால் மீது எழுந்த குற்றச்சாட்டு, நடிகர் சங்கத் தலைவர் நாசருக்கே இப்படி ஒரு நிலமையா? – புரட்சித் தளபதி இதுல கூடவா புரட்சி பண்ணுவாரு?

- Advertisement -

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக அடையாளம் காணப்பட்டவர் நடிகர் விஷால். சண்டக்கோழி, திமிரு, துப்பறிவாளன், பூஜை, தாமிரபரணி, மலைக்கோட்டை, மார்க் ஆண்டனி போன்ற நல்ல வெற்றிப் படங்களை கொடுத்தவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்வி படங்களை தந்து வருகிறார். மார்க் ஆண்டனி வெற்றிக்கு பிறகு ரத்னம் படம் பிளாப் ஆனது.

சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி விஷால் சொந்தமாக திரைப்படங்களும் தயாரிக்கிறார். 2007 – 2009ம் ஆண்டுகளில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகியாக இருந்திருக்கிறார். இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார். சில காரணங்களால், தயாரிப்பாளர் சங்கம் விஷால் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில், நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முக்கிய பொறுப்பில் இருப்பதால் தலைவர் மற்றும் பொருளாளரை காட்டிலும், பொதுச் செயலாளர் பதவிக்கு கூடுதல் முக்கியத்துவம், அதிகாரங்கள் இருக்கின்றன. சில முக்கிய முடிவுகளை அவரது சம்மதமின்றி தலைவரோ, பொருளாளரோ எடுக்க முடியாது.

இப்படிப்பட்ட சூழலில், நடிகர் சங்கம் தரப்பில் வெளியாகும் அறிக்கைகளில் நடிகர் சங்க தலைவர் நாசர் பெயர் மற்றும் அவரது கையொப்பம் இருக்கும், பொருளாளர் கார்த்தி பெயர் மற்றும் அவரது கையொப்பம் இருக்கும். ஆனால் பெரும்பாலும் விஷால் பெயர் இருந்தாலும் அவரது கையெழுத்து இருக்காது.

- Advertisement -

சமீபத்தில் விஷால் ஒப்புதலுடன் வெளியிட வேண்டிய நடிகர் சங்கம் சார்பில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்காக, அவரது கையெழுத்தை பெற சங்கத்தின் தலைவர் நாசரே போனில் அழைத்திருக்கிறார். ஆனால் போனில் பேசிய விஷாலின் உதவியாளர், சாரிடம் சொல்லி பேச சொல்கிறேன் என்று கூறியிக்கிறார். ஆனால் கடைசி வரை விஷால் நாசரிடம் பேசவில்லை.

அதே போல் சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களுக்காக யார் விஷாலை அழைத்தாலும் அவரது உதவியாளர்தான் போனில் பேசுவார். சாரிடம் தகவல் சொல்கிறேன் என்று கூறிவிட்டு வைத்து விடுவார். பிறகு விஷால் அழைத்து யாரிடமும் பேச மாட்டார். இப்படி சினிமா சங்க நிர்வாகிகள், சினிமா சார்ந்தவர்களின் முக்கிய போன்களை விஷால் அலட்சியப்படுத்துகிறார். அவரை தொடர்பு கெ்ாள்ளவே முடியாத சூழல் நிலவுகிறது. அதனால் நாசர் போன்றவர்களே விஷால் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்