தமிழ் சினிமாவில் ஒளிஓவியர் என அழைக்கப்பட்டவர் இயக்குனர் தங்கர்பச்சான். பல படங்களில் ஒளிப்பதிவாளராக இருந்த அவர் இயக்குனராகவும் சிறந்த படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தந்திருக்கிறார். குறிப்பாக அழகி சொல்ல மறந்த கதை பள்ளிக்கூடம் 9 ரூபாய் நோட்டு அம்மாவின் கைபேசி தென்றல் போன்ற பல படங்களை அவர் இயக்கி உள்ளார்.
இயல்பான கதைக்களத்தில் யதார்த்தமான கேரக்டர்களை கொண்ட இயக்குனர் தங்கர்பச்சான் படங்கள் ரசிகர்களின் மனம் கவர்ந்த சிறந்த படங்களாக உள்ளன. அதில் அழகி பள்ளிக்கூடம் சொல்ல மறந்த கதை போன்ற பட்ஙகள் பெரிய வரவேற்பை பெற்றன. இதில் சிதம்பரத்தில் அப்பாசாமி படத்தில் ஒரு ஹீரோ நடிகராகவும் தங்கர்பச்சான் அதிக பாராட்டை பெற்றார்.
மேலும் பள்ளிக்கூடம் கருமேகங்கள் கலைகின்றன போன்ற படங்களில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது. கடந்தமுறை பாமக சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். இப்போது தங்கர் பச்சான் மகனும் நடிகராக சினிமா களத்தில் குதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் திரைப்பட இயக்குனர் ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் தங்கப்பச்சான் வெளியிட்டுள்ள ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, 40 கோடி ரூபாய் இருந்தால் மட்டுமே இனி சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் நுழைய முடியும் என்னும் கேடுகெட்ட நிலைக்கு அரசியலை கொண்டு சென்று விட்டார்கள்.
செலவழித்த பணத்தை திருப்பி எடுக்கவும் மேலும் கொள்ளை அடித்து அடுத்த தேர்தலை சந்திக்கவும் மட்டுமே ஐந்து ஆண்டுகள் வேலை செய்வார்கள். இதில் மக்களாட்சிக்கு இனி என்ன வேலை இருக்கப் போகின்றது? இனிமேல் எந்த ஒரு சாதாரண மனிதனும் அரசியல் மூலம் மக்களுக்கு தொண்டு செய்யும் எண்ணத்தை விட்டு விட வேண்டியதுதான்.
அனைத்து திருட்டுத்தனங்களையும் செய்வதற்கு, மக்கள் கேள்வி கேட்காதவாறு அவர்களையும் கூட்டுச் சேர்த்துக் கொள்ளும் சூழ்ச்சியை அறிமுகப்படுத்திய கட்சி தமிழ்நாட்டில் இருக்கும் வரை உண்மையான மக்களாட்சி எக்காலத்திலும் மலரப் போவதில்லை என இயக்குனர் தங்கர் பச்சான் அந்தப் பதிவில் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.





