தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 10 முதல் 15 தொகுதிகளில் மட்டுமே தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறும். 125 முதல் 150 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்து கணிப்புகள் வெளியாகி இருந்தது.
அதே போல் பாஜக கூட்டணியுடன் கைகோர்த்த அதிமுக அதிக இடங்களில் ஜெயித்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றும். எதிர்கட்சியாக திமுக இருக்கும் என்றும் கருத்து கணிப்பில் கூறப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவு வெளியான பிறகு எல்லாமே தலைகீழாக மாறிப் போய்விட்டது.
இப்போது 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தவெக கட்சி, அதிக தொகுதிகளில் வென்ற கட்சி என்ற அடிப்படையில் தமிழகத்தில் ஆட்சியமைக்க அழைக்குமாறு கவர்னரிடம் கடிதம் கொடுத்துள்ளது. இந்த சூழலில் திமுக எதிர்கட்சியாகவும் அதிமுக மூன்றாவது இடத்துக்கும் தள்ளப்பட்டுள்ளது. இது வரலாற்றில் இதுவரை நடக்காத ஒன்றாக நடந்திருக்கிறது.
தமிழக சட்டசபையில் தவெக கட்சியின் தலைவராக நடிகர் விஜய் இன்றைய எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் வருகிற 7ம் தேதி நாளை மறுதினம் தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்க உள்ளார். இந்த பதவியேற்பு விழா, சென்னையில் உள்ள நேரு இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவில் விஜயின் பெற்றோர் எஸ்ஏ சந்திரசேகர் – ஷோபா சந்திரசேகர் பங்கேற்க உள்ளனர். மூத்த நடிகர் என்ற முறையில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படலாம். மற்றொரு சீனியர் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுவிட்டதால் அவர் விழாவில் பங்கேற்க வாய்ப்பில்லை.
அதே நேரத்தில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா மகள் திவ்யா சாஷா மகன் ஜேசன் சஞ்சய் ஆகியோரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. லண்டனில் சங்கீதா திவ்யா சாஷா இருவரும் இருப்பதாகவும், சிக்மா படம் சார்ந்த பணிகளில் ஜேசன் சஞ்சய் பிஸியாக இருப்பதாலும் அவர்கள் இந்த விழாவுக்கு வர மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் விஜயின் தோழி நடிகை திரிஷா நிச்சயம் கலந்துக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.





