- Advertisement -
Homeபொழுதுபோக்குமேடையில் நடிகர் சிவகுமாரை கலாய்த்த கஸ்தூரி... தந்தையைப் பற்றி பேசியதால் கடுப்பாகி பதிலடி கொடுத்த மகன்...

மேடையில் நடிகர் சிவகுமாரை கலாய்த்த கஸ்தூரி… தந்தையைப் பற்றி பேசியதால் கடுப்பாகி பதிலடி கொடுத்த மகன் கார்த்தி…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது மிக பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வந்தியத்தேவனாக நடித்து பாராட்டைப் பெற்ற அவர் தற்போது ராஜுமுருகன் இயக்கத்தில் ஜப்பான் படத்தின் நடித்து முடித்து இருக்கிறார். இந்த திரைப்படம் ஒரு காலத்தில் கொள்ளை சம்பவங்களில் உச்சத்தில் இருந்த திருவாரூர் முருகனைப் பற்றிய கதை என்று கூறப்படுகிறது.

இதன் இசை வெளியீட்டு விழா வரும் 28ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. ஜப்பான் திரைப்படம் கார்த்தியின் 25வது திரைப்படமாக உருவாகிறது. இதன்பிறகு சூது கவ்வும், காதலும் கடந்து போகும் திரைப்படங்களை இயக்கிய நலன் குமாரசாமி படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

- Advertisement -

ராஜ்கிரண், சத்யராஜ் உள்ளிட்டோரும் இந்த படத்தில் இடம் பெற்றுள்ளனர். இதில் தீவிர எம்ஜிஆர் ரசிகனாக கார்த்தி நடிக்கிறாராம். அவரது தாத்தாவான ராஜ்கிரணும் எம்ஜிஆர் ரசிகராக வருகிறாராம். முழுக்க முழுக்க என்டர்டைன்மெண்ட் திரைப்படமாக உருவாகும் இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகிறது.

இதற்குப் பிறகு 96 படத்தை இயக்கிய பிரேம்குமார் உடன் கார்த்தி இணைகிறார். தனது முதல் திரைப்படத்தை காதல் காவியமாக எடுத்த பிரேம்குமார் இந்த படத்தை குடும்பத்தை மையப்படுத்தி எடுக்க உள்ளாராம். இதனை சூர்யாவின் 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்குப் பிறகு லோகேஷ் கனகராஜுடன் கை கோர்க்கும் கார்த்தி கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அதனைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி, கார்த்தியின் அருகில் சென்று, “உங்களுடன் செல்பி எடுக்கப் போகிறேன். இங்குதான் உங்கள் தந்தை சிவக்குமார் இல்லையே” என்று கூறி கிண்டல் அடித்தார். தன்னை செல்பி எடுக்க வந்த ரசிகரின் மொபைலை சிவக்குமார் தட்டிவிட்டார். இந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியான நிலையில், அதை குறிப்பிட்டு கஸ்தூரி இப்படி செய்திருந்தார்.

இதனால் கடுப்பாகி போன கார்த்தி, இது ஒரு தேவையில்லாத விஷயம். செல்பி என்னும் விஷயத்தில் மரியாதையே இல்லாமல் போய்விட்டது. ஒருவரிடம் கேட்டு புகைப்படம் எடுக்க வேண்டும் என்பதே இப்போது இல்லை. அதுவும் செல்போனில் முன்னாடி ஒரு ஃப்ளாஷ், பின்னாடி ஒரு பிளாஷ் வெளிச்சம் உள்ளது. இது அருகில் கொண்டு வந்து புகைப்படம் எடுக்கும் போது மற்றொருவன் என்ன ஆவான். இந்த விஷயத்தில் யாருக்கும் விவஸ்தையே இல்லை என்றுதான் நினைக்கிறேன். ஒருவரிடம் கேட்டு புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற மரியாதையே தெரியாமல் இருப்பதை நினைக்கும்போது வருத்தமாக இருக்கிறது என்று பேசினார். சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்தி பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

- Advertisement -

சற்று முன்