நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி, காங்கிரஸ் கட்சி 5 எம்எல்ஏக்கள் ஆதரவு என 113 எம்எல்ஏக்கள் கைவசம் இருந்தும் இன்னும் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க அழைக்கப்படவில்லை. இன்னும் தமிழக கவர்னர் (பொறுப்பு) அர்லேகர் விஜயை ஆட்சியமைக்க அழைக்கவில்லை.
தவெக கட்சியுடன் காங்கிரஸ் இணைந்ததால் தான் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க விடாமல் பாஜக தடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளிடம் விஜய் கட்சிக்கு தேவையான 6 எம்எல்ஏக்கள் இருந்தும் அவர்களிடம் தவெக ஆதரவு கேட்டும் அவர்கள் இன்னும் தரவில்லை.
சட்டமன்ற தேர்தலில் 108 தொகுதிகளில் விஜய் கட்சி வெற்றி பெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதில் இன்னும் சிக்கல்கள் நீடித்து வருகின்றன. விஜய் ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெறுவார் என்று துல்லியமாக கணித்த ஒரு ஜோதிடர் தற்போது விஜயின் ஆட்சி அமையப்போகும் சூழல் மற்றும் அதற்குப் பின் வரக்கூடிய சவால்கள் குறித்தும் எச்சரிக்கை விடுத்து வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த ஜோதிடரின் தனது கணிப்பில், விஜய் ஆட்சி அமைப்பதும், ஆட்சி அமைத்த பின்னர் அந்த ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதை தடுக்க பல்வேறு சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். விஜயின் ஜாதகப்படி பாதகாதிபதி சுக்கிரன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் இருப்பதால் அவர் முதலமைச்சராக பதவி ஏற்பதிலும் ஆட்சியை தொடர்வதிலும் ஏராளமான அரசியல் நெருக்கடிகளையும் சட்ட சிக்கல்களையும் சந்திக்க நேரிடும் என்றும் அந்த ஜோதிடர் உறுதியாக கூறியிருக்கிறார்.
இந்த தடைகளை இடையூறுகளை தகர்க்க ஆன்மீக ரீதியான சில தீர்வுகளை அந்த ஜோதிடர் பரிந்துரை செய்திருக்கிறார். அதன்படி தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் கோவில் மற்றும் அங்குள்ள சுயம்பு பிரகாசர் சித்தர் சிவன் கோவிலுக்கு விஜய் நேரில் சென்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அர்ச்சனைகள் செய்வதன் மூலம் விஜயின் அரசியல் பயணத்தில் வரவிருக்கும் ஆபத்துகளை குறைக்க முடியும் என்றும் அந்த ஜோதிடர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே விஜயின் ஆஸ்தான ஜோதிடர் கூறிய அறிவுரைப்படி தான் விஜய் திருச்செந்தூர் முருகன் கோவில், ஷீரடி சாய்பாபா கோவில்களுக்கு சென்றார். இப்போது இந்த ஜோதிடரும் சில கோவில்களுக்கு சென்றால் அது விஜய்க்கு நல்ல பரிகாரமாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். அரசியல் களத்தில் விஜய்க்கு இன்னும் பல சவால்கள் நெருக்கடிகள் இருப்பதை இந்த ஜோதிடரும் உறுதிப்படுத்தியுள்ளார். இது தவெக கட்சியினரை விரக்தியடைய செய்துள்ளது.





