- Advertisement -
Homeபொழுதுபோக்குமணிரத்னம் இயக்கிய படத்தில் நடிக்க மறுத்த நடிகை பூமிகா, அதுவும் அந்த படத்திலா? சூப்பர் சான்ஸை...

மணிரத்னம் இயக்கிய படத்தில் நடிக்க மறுத்த நடிகை பூமிகா, அதுவும் அந்த படத்திலா? சூப்பர் சான்ஸை மிஸ் பண்ணிட்டீங்களே என புலம்பிய ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூமிகா. ரோஜா கூட்டம், பத்ரி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் பூமிகா நடித்திருந்தார். இப்போது பிரதர் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் பூமிகா ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். எம் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவிக்கு அக்காவாக பிரதர் படத்தில் பூமிகா நடித்திருக்கிறார்.

பிரதர் படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன், நட்டி, தேவதர்ஷினி, ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இது அக்கா தம்பி பாசத்தை மையப்படுத்திய ஒரு படமாக உருவாகியுள்ளது. பிரதமர் படத்தின் பிரதோஷனுக்காக சென்னைக்கு வந்துள்ள பூமியா நேர்காணல் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியிருக்கிறார்.

- Advertisement -

அதில் நடிகை பூமிகா கூறியதாவது, நான் தமிழில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்தபோது மணிரத்னம் கம்பெனியிலிருந்து எனக்கு ஒரு அழைப்பு வந்தது. மணிரத்னம் சார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க விருப்பமா என்று என்னிடம் கேட்டார்கள். அவரது படத்தில் யாராவது மறுப்பு சொல்வார்களா என்று நான் உடனே சரி என்று ஒப்புக் கொண்டேன்.

ஆனால், பின்புதான், அந்த விஷயம் எனக்கு தெரிந்தது. மணிரத்னம் இயக்கும் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நான் நடிக்க வேண்டும் என்பது தெரிய வந்தது. அப்போது நான் பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருந்தேன்.

- Advertisement -

அந்த படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நீங்கள் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்தால், எங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படும். கதாநாயகியாக நீங்கள் நடிக்கும் படங்கள் சரியாக ஓடாது என்று கூறினார்கள். எனக்கு அதுதான் சரி என பட்டது. அதனால் மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க மறுத்து விட்டேன்.

நான் நடிக்க மறுத்த அந்த படம்தான் கன்னத்தில் முத்தமிட்டால். நான் நடிக்க வேண்டிய அந்த கேரக்டரில் சிம்ரன் நடித்தார். கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற அருமையான படத்தை தவறவிட்ட வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு என்று பூமிகா அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் சிம்ரன் கேரக்டரில் பூமிகா நடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும் என்று ரசிகர்களும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்