சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் கடந்த 6ம் தேதி மாலை, கலைஞர் 100 விழா நடத்தப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்ஸி தொழிலாளர் அமைப்பு, இயக்குநர்கள் சங்கம் என 5 அமைப்புகளை சேர்ந்த குழுவினர் இந்த விழாவை நடத்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், சூர்யா, கார்த்தி, தனுஷ், டி ராஜேந்தர், நயன்தாரா, யோகிபாபு என பல முன்னணி நட்சத்திர நடிகர், நடிகையர் கலந்துக்கொண்டனர். ஆனால் மிக பிரமாண்டமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த விழாவில் ஆயிரம் பேர் கூட கலந்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.
இதற்கு மிக முக்கியமான சில காரணங்களாக விழா ஏற்பாட்டாளர்கள் விழாவை திட்டமிட்டு ஒருங்கிணைத்து செய்யவில்லை என்பதுடன், விஜய், அஜீத்குமார் போன்றவர்களை உரிய முறைப்படி அழைக்கவில்லை என்பதும்தான். மேலும், வுந்த நடிகர், நடிகைகளையும் அங்கு கண்டுகொள்ளவும், அவர்களை கவனிக்கவும் எந்த ஏற்பாடும் இல்லை.
இந்த விழாவில் ஏதேச்சயைாக சந்தித்துக்கொண்ட இயக்குநர் அமீர், நடிகர் சூர்யா இருவரும் கட்டியணைத்து கொண்டு நலம் விசாரித்துக்கொண்டதும், அதனால் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பதில் பிரச்னை இல்லை என்றும் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ஆனால் அதே வேளையில் மற்றொரு முக்கிய சம்பவமும் அந்த விழா நிகழ்ச்சியின் போது நடந்திருக்கிறது. விழா மேடையின் முன்வரிசையில் முதல் வரிசையில் இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டோர் அமர்ந்து இருந்துள்ளனர். அவர்களை கடந்துதான் யாராக இருந்தாலும் சென்று வர வேண்டும்.
தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளராக உள்ள நடிகர் கார்த்தி அங்கு அமர்ந்திருந்த இயக்குநர்கள் அமீர், வெற்றிமாறன் கடந்துதான் பலமுறை சென்றுவந்து இருக்கிறார். ஆனால் ஒருமுறை கூட இவர்கள் பக்கமே திரும்பாமல் தலையை குனிந்தபடி சென்று வந்திருக்கிறார். பருத்திவீரன் படத்தில் ஒரு மாஸ் ஹீரோவாக தனக்கு வாழ்க்கை கொடுத்த அமீரை மதிக்காமல், இப்படி நடந்துக்கிறாரே என அங்கிருந்த பலரும் கமெண்ட் அடித்து கோபப்பட்டுள்ளனர்.





