- Advertisement -
Homeபொழுதுபோக்குகாமெடி நடிகர் முத்துக்காளை வைத்த கோரிக்கை, உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர்...

காமெடி நடிகர் முத்துக்காளை வைத்த கோரிக்கை, உடனடியாக கவனித்து உரிய நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வர் விஜய்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருப்பவர் முத்துக்காளை. நடிகர்கள் வடிவேலு விவேக் கவுண்டமணி செந்தில் உள்ளிட்டோர் நடித்த படங்களில் அவர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். பல படங்களில் இவரது காமெடி நடிப்பு பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.

மேலும் தனது வயதை பொருட்படுத்தாமல் முத்துக்காளை சமீபத்தில் சில பட்டப்படிப்புகளை படித்து முடித்த சாதித்து காட்டியவர். குடிப்பழக்கத்துக்கு ஆளான அவர் அந்த பழக்கத்தில் இருந்து விடுபட்டு படிப்பின் மீது ஆர்வம் காட்டி பல பட்டங்களை வென்றவர் என்றும் பாராட்டுகளை பெற்றவர். நடிகர் வடிவேலுவுடன் பல படங்களில் முத்துக்காளை காமெடி செய்திருக்கிறார்.

- Advertisement -

முத்துக்காளை முதலில் நடிகராக அறிமுகமானது நடிகர் விஜயகாந்த் நடித்த நெறஞ்ச மனசு என்ற படத்தில்தான். இன்றைய குணச்சித்திர நடிகர் சமுத்திரக்கனி இயக்கிய இந்த படத்தில் முத்துக்காளை காமெடி நடிகராக அறிமுகமாகி இருந்தார். பிறகு ஏராளமான படங்களில் முத்துக்காளை நடித்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி, 47 வயதான நிலையில் அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -

கிருமி நோய் தொற்றால் அவர் நினைவின்றி உள்ள நிலையில் தனது மனைவிக்கு மேல்கட்ட உதவ வேண்டும் என்று உதவ வேண்டும் என்று தமிழக முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வீடியோ ஒன்றை வெளியிட்டு கோரிக்கை விடுத்தார். இது சமூக வலைதளங்களில் பரவி வைரலானது.

இதையறிந்த முதல்வர் விஜய், உடனடியாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவிடம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து நடிகர் முத்துக்காளைக்கு தேவையான உதவிகளை செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அமைச்சர் ராஜ்மோகன், ஆதவ் அர்ஜூனா அறிவுறுத்தலின்படி நேரடியாக அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்று நடிகர் முத்துக்காளை சந்தித்து பேசினார். அதன்பிறகு முத்துக்காளை மனைவி மாலதிக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் விஜயின் இந்த உடனடி நடவடிக்கைக்கு நடிகர் முத்துக்காளை நெகிழ்ச்சியாக நன்றி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்