இயக்குனர் ஹரி இயக்கத்தில் கடந்த 2013ம் ஆண்டில் வெளியான படம் சிங்கம் 2. நடிகர் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்த இந்த படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற நிலையில் அதற்கு பிறகு 13 ஆண்டுகளாக நடிகர் சூர்யாவுக்கு எந்த படமும் பெரிய வெற்றியை தரவில்லை.
நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான ஜெய்பீம் மற்றும் சூரரைப்போற்று ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே அவருக்கு வணிக ரீதியான வெற்றி படங்களாக இருந்தன. அதனால் தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாடும் ஒரு பெரிய வெற்றி படத்திற்காக நடிகர் சூர்யா பல ஆண்டுகளாக காத்திருந்தார். இந்நிலையில் தற்போது திரைக்கு வந்துள்ள கருப்பு படம் அந்த குறையை தீர்த்து வைத்துள்ளது.
நடிகர் சூர்யா இதுவரை நடித்த படங்களிலேயே 170 கோடி ரூபாய் வசூலை கடந்து 200 கோடி ரூபாய் வசூலை எட்டும் அளவுக்கு கருப்பு படம் மிகப்பெரிய வரவேற்புடன் தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. கடவுளை மையப்படுத்திய கதைக்களத்தில் உருவான இந்த படத்தில் நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய ஆதரவு ரசிகர்களிடம் கிடைத்து வருகிறது.
அதனால் இந்த படம் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு வெற்றி படமாக மாறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நடிகர் மோகன்லால் நடிகை மீனா உள்ளிட்டோர் நடித்த திரிஷியம் 3 படம் இன்று உலகம் முழுவதும் திரைக்கு வந்துள்ளது. ஏற்கனவே திரிஷியம் திருசியம் 2 படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற படங்களாகும்.
மலையாள இயக்குனர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் திரிஷியம் படம் 3வது பாகமாக உருவாகியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் கருப்பு படம் ரிலீஸ் செய்யப்பட்டு இருந்த பெரும்பாலான தியேட்டர்களில் ஹவுஸ்புஃல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது. இன்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்த திரிஷியம் 3 படம் ரிலீஸ் ஆனதால் கருப்பு படம் கேரளாவில் 90 சதவீதம் தியேட்டர்களில் எடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் குவைத் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் தியேட்டர்களில் ஓடிய கருப்பு படத்தை எடுத்துவிட்டு மோகன்லால் படம் திரிஷியம் 3 இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதனால் ஓவர்சீஸ் அளவிலும் கருப்பு படத்தின் கணிசமான வசூல் பாதிக்கப்பட்டு உள்ளது. திருஷியம் 3 படம் ரிலீஸ் காரணமாக கருப்பு படத்தின் கேரளா மற்றும் ஓவர்சீஸ் நாடுகளின் வருமானம் கணிசமாக குறைந்து இருப்பது கருப்பு படக்குழுவினருக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.





