- Advertisement -
Homeபொழுதுபோக்குஉன்னை நீயே காயப்படுத்திக் கொள்ளாதே, நன்றாக தூங்கு - நடிகர் ரவிமோகனுக்கு அட்வைஸ் செய்த பிரபல...

உன்னை நீயே காயப்படுத்திக் கொள்ளாதே, நன்றாக தூங்கு – நடிகர் ரவிமோகனுக்கு அட்வைஸ் செய்த பிரபல சீனியர் நடிகை!

- Advertisement -

தமிழ் சினிமாவல் முன்னணி நட்சத்திர நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி என்கிற ரவி மோகன். அவரது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்னைகளால் இப்போது மனைவி ஆர்த்தி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே பாடகி கெனிஷாவுடன் நடிகர் ரவிமோகன் நெருக்கமான நட்பில் இருந்தது பெரிய சர்ச்சையை கிளப்பியது. இருண்டு போன என் வாழ்க்கையில் ஒளியாக வந்தவர் கெனிஷா என்றும் ரவிமோகன் வெளிப்படையாக கூறினார். ஆனால் பல பிரச்னைகளால் கெனிஷாவுடம், ரவிமோகனை விட்டு பிரிந்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரவிமோகன் பல விஷயங்களை வெளிப்படையாக பேசினார். தன் குடும்பம் பிள்ளைகள் குறித்த பல விஷயங்களை கொட்டித் தீர்த்தார். தன்னை சிலர் சீண்டுவதாகவும் பழிவாங்க நினைப்பதாகவும் தன்னை அழிப்பதே அவர்களின் நோக்கம் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் என் குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பல பிரச்னைகளுக்கு அந்த 3 எழுத்து இட்லி நடிகைதான் முக்கிய காரணம் என்றும் கூறினார். நான் ரத்த வாந்தி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு யாரோ பிளாக் மேஜிக் வைத்துள்ளனர் என்றும் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் எப்போதும் சிரித்த முகத்துடன் கலகலப்பாக இருக்கும் ரவிக்கு இத்தனை பிரச்னைகளா என்று அதிர்ச்சியடைந்தனர்.

- Advertisement -

இந்நிலையில் தமிழ் சினிமாவில் சீனியர் நடிகை அம்பிகா தனது எக்ஸ் பக்கத்தில் ரவிமோகன் குறித்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அம்பிகா கூறியிருப்பதாவது, ரவி நீ முதலில் பலவீனமாக உணராதே. எல்லாம் சரியாகிவிடும். கடவுள் உன்னை சோதிக்கிறார். கொஞ்சம் தாமதிக்கிறார் என்று நினைத்துக் கொள். தவறான முடிவுகளை எடுக்காதே. உன்னை நீயே காயப்படுத்திக் கொள்ளாதே.

குழந்தைகள் மீது நீ வைத்திருக்கும் பாசமே உனது வாழ்க்கை மீதான பிரியத்தை உனக்கு கொண்டு வரும். கடவுளிடம் வேண்டிக் கொள். நன்றாக தூங்கு. அப்பா அம்மாவுடன் இரு அல்லது உன்னை நன்கு அறிந்தவர்களுடன் இரு என்று அம்பிகா அதில் பதிவிட்டுள்ளார். மூத்த நடிகையான அம்பிகா இளம் நடிகர் ரவிமோகன் மீது அக்கறை கொண்டு செய்த இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்