- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழரசன் பச்சமுத்து டைரக்‌ஷனில் உருவாகும் டி 56 படம் - படத்தின் நாயகி அவர்கள் 2...

தமிழரசன் பச்சமுத்து டைரக்‌ஷனில் உருவாகும் டி 56 படம் – படத்தின் நாயகி அவர்கள் 2 பேருமே இல்லை – அந்த ஆக்ரோஷமான நாயகிக்குதான் வாய்ப்பு!

- Advertisement -

நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஓம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதம் நிறைவடைய உள்ள நிலையில் வருகிற செப்டம்பர் மாதம் தனது அடுத்த படத்தில் நடிகர் தனுஷ் நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்க உள்ளார்.

ஏற்கனவே லப்பர் பந்து என்ற சூப்பர் ஹிட் படத்தை தந்த இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து அடுத்து 2வது படமாக தனுஷ் நடிக்கும் அவரது 56 படத்தை இயக்க உள்ளார். மதுரை கதைக் களத்தில் இந்த படம் உருவாகிறது. இதற்காக மதுரையில் அலுவலகம் அமைத்து தங்கி படத்தின் ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளில் இயக்குனர் சில மாதங்களாக இருந்து வருகிறார்.

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை இயக்குனர் பரிந்துரை செய்திருக்கிறார். ஏனென்றால் அவரது முதல் படத்தில் லப்பர் பந்து கதாநாயகி அவர்தான். ஆனால் இதற்கு ஹீரோ தனுஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் நடிகை மமிதா பைஜூவை இந்த படத்தில் தனக்கு ஜோடியாக்கவும் அவர் கூறியிருக்கிறார்.

ஆனால் ஏற்கனவே நடிகர் தனுஷ் நடிகை மமிதா பைஜூ இணைந்து நடித்த கர படம் சரியாக போகவில்லை. அதனால் மீண்டும் அந்த ஜோடி இணைந்து நடித்தால் பெரிய வரவேற்பை பெறுமா என்பதில் படக்குழுவுக்கு அதிருப்தி நிலவுகிறது. இதற்கிடையே இந்த படத்தை நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம்தான் தயாரிக்கிறது என்ற தகவலும் வெளியானது.

இந்த படத்தை தயாரிப்பது டான் பிக்சர்ஸ் நிறுவனம்தான். இதயம் முரளி படத்தின் இயக்குனர் ஆகாஷ் பாஸ்கரன்தான் இந்த படத்தை தயாரிக்கிறார் என்பதும் உறுதியாகி உள்ளது. மேலும் படத்தின் நாயகி குறித்த ஒரு லேட்டஸ்ட் தகவலும் வெளியாகி உள்ளது. அதன்படி சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, மமிதா பைஜூ இருவரும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நடிகை ப்ரீத்தி முகுந்தன் தான் இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்கிறார்.

சமீபத்தில் வெளியான பிளாஸ்ட் படத்தில் நடிகர் அர்ஜூன் மகளாக ஸ்டண்ட் காட்சிகளில் ஆக்ரோஷமாக நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தனுக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் இதயம் முரளி படத்திலும் அவர் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கிறார். அதனால் இந்த படத்தில் கதாநாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிப்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்