- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா ஞானபீடம் விருது பெற்ற கவிஞர் வைரமுத்து இதுவரை இத்தனை விருதுகளை வாங்கியிருக்கிறாரா? அசந்து போன...

அடேங்கப்பா ஞானபீடம் விருது பெற்ற கவிஞர் வைரமுத்து இதுவரை இத்தனை விருதுகளை வாங்கியிருக்கிறாரா? அசந்து போன தமிழ் சினிமா ரசிகர்கள்!

- Advertisement -

கலைஞர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் அவர்களது திறமைக்கான அங்கீகாரமாகவும் ஒரு முக்கிய அடையாளமாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் விருதுகளால் பெருமை தேடிக் கொண்ட கலைஞர்களும் உண்டு. ஆனால் அதே நேரத்தில் விருதுகளுக்கே பெருமை சேர்க்கும் கலைஞர்களும் இருக்கவே செய்கின்றனர். அந்த வகையில் 2வது பிரிவை சேர்ந்த கவிப்பேரரசு வைரமுத்து இதுவரை ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார்.

ஆனால் விருதுகளால் அவர் பெருமை தேடிக் கொள்பவர் அல்ல. அவரால் தான் விருதுகள் பெருமைப்படுகின்றன. கவிஞர் வைரமுத்து இதுவரை பெற்ற விருதுகள் விபரம் வருமாறு: கடந்த 2003ம் ஆண்டில் இலக்கியம் மற்றும் கல்விக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதை கவிஞர் வைரமுத்து பெற்றிருக்கிறார். அதே 2003ம் ஆண்டில் கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற நாவலை எழுதிய கவிஞர் வைரமுத்து சாகித்திய அகாடமி விருதும் பெற்று இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்திய இலக்கிய பங்களிப்புக்காக கடந்த 2009ம் ஆண்டில் சாதனா சம்மான் என்ற விருதும் கவிஞர் வைரமுத்துவுக்கு கிடைத்திருக்கிறது. அதேபோல் கடந்த 2014ம் ஆண்டில் இலக்கியம் மற்றும் கல்விக்காக பத்மபூஷண் விருது கவிஞர் வைரமுத்து பெற்றிருக்கிறார். மேலும் தமிழக அரசின் மாநில விருதுகள் என்ற வகையில் சிறந்த பாடலாசிரியருக்காக விருதுகளை அவர் பலமுறை பெற்றுள்ளார்.

கடந்த 1981ம் ஆண்டில் அலைகள் ஓய்வதில்லை படத்திற்காகவும் 1995ம் ஆண்டில் கருத்தம்மா படத்துக்காகவும் 1996ம் ஆண்டில் முத்து மற்றும் பம்பாய் படங்களுக்காகவும் 2000ம் ஆண்டில் சங்கமம் படத்துக்காகவும் 2006 ஆண்டில் அந்நியன் படத்துக்காகவும் 2008ம் ஆண்டில் பெரியார் படத்துக்காகவும் தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதுகளை கவிஞர் வைரமுத்து பெற்றிருக்கிறார்.

- Advertisement -

மேலும் தமிழக அரசின் சிறப்பு விருதுகளாக 1990ம் ஆண்டில் கலைமாமணி விருதும் பாவேந்தர் விருதும் வைரமுத்து பெற்றிருக்கிறார். மேலும் சிறந்த பாடல் ஆசிரியருக்கான தேசிய விருதை இதுவரை 7 முறை பெற்றிருக்கிறார். 1986ம் ஆண்டில் முதல் மரியாதை 1993ம் ஆண்டில் ரோஜா 1995ம் ஆண்டில் கருத்தம்மா மற்றும் பவித்ரா, 2000ம் ஆண்டிலும் சங்கமம் 2003 ஆண்டில் கன்னத்தில் முத்தமிட்டால் 2010ம் ஆண்டில் தென்மேற்கு பருவக்காற்று 2016ம் ஆண்டில் தர்மதுரை ஆகிய படங்களுக்காக கவிஞர் வைரமுத்து மத்திய அரசின் சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதை பெற்றிருக்கிறார்.

மேலும் 2007ம் ஆண்டில் தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம், 2008ம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகம், 2009ம் ஆண்டில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் என தொடர்ந்து 3 ஆண்டுகள் கௌரவ டாக்டர் பட்டங்களையும் கவிஞர் வைரமுத்து பெற்றிருக்கிறார். மேலும் தனது 73வது வயது பிறந்த நாளில் நேற்று முன்தினம் 13ம் தேதி அவர் சிறந்த இலக்கியத்திற்கான உயரிய விருதான ஞானபீடம் விருதை பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்