தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல படங்களில் நடித்தவர் உதயநிதி ஸ்டாலின். குறிப்பாக அவர் ஹீரோவாக நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி நண்பேன்டா இது கதிர்வேலன் காதல் பொதுவாக எம்மனசு தங்கம் நெஞ்சுக்கு நீதி மாமன்னன் சைக்கோ மனிதன் கலக தலைவன் சரவணன் இருக்க பயமேன் என பல படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.
ரெட் ஜெயிண்ட் மூவிஸ் என்ற சொந்த தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் உதயநிதி ஸ்டாலின் ஏராளமான படங்களை அவரே சொந்தமாக தயாரித்து இருக்கிறார். பல படங்களை அவர் வெளியீடும் செய்து வந்தார். குறிப்பாக கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் சினிமா துறையே அவரது கட்டுப்பாட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுக ஆட்சி காலத்தில் எம்எல்ஏவாக இருந்த அவர் பிறகு விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தார். பிறகு துணை முதல்வராகவும் பணியாற்றினார். அரசியல் பணிகள் அதிகரித்ததால் சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டு துணை முதல்வராக ஆட்சியில் அதிக கவனம் செலுத்தினார். திமுக கூட்டங்களில் அதிகமாக பங்கேற்றார். தனது அப்பா ஸ்டாலினை போலவே உதயநிதியும் திமுகவை வழிநடத்தினார்.
ஆனால் துரதிஷ்டவசமாக கடந்த சட்டசபை தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்தது. கொளத்தூரில் திமுக தலைவர் ஸ்டாலின் தோல்வியடைந்தார். திமுக எதிர்கட்சியாக மாறிய நிலையில் எதிர்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். தவெக ஆட்சி குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
உதயநிதி மகன் இன்பன் உதயநிதி கட்டுப்பாட்டில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் உள்ள நிலையில், அவரும் ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். அந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஏனெனில் சினிமாவில் நடித்து அந்த புகழின் வெளிச்சத்தில் தான் விஜய் முதல்வராகி இருக்கிறார். அதனால் மீண்டும் சினிமாவில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கை பலப்படுத்திக்கொள்ள உதயநிதி முடிவு செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அந்த படத்தை நடிகர் கமல்ஹாசன்தான் இயக்குகிறார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை என்றும் கூறப்படுகிறது.





