- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது அந்த நடிகர் தானாம் - நடிச்சிருந்தா இந்தியாவே...

ஜெயிலர் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது அந்த நடிகர் தானாம் – நடிச்சிருந்தா இந்தியாவே கொண்டாடி இருக்கும்

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது 169-ஆவது திரைப்படமாக வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி ஜெயிலர் படமானது உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது. சூப்பர் ஸ்டாரின் இந்த ஜெயிலர் திரைப்படத்தினை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், மோகன்லால், சிவராஜ் குமார் பல்வேறு நட்சத்திரங்களும் நடித்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஜெயிலர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது ஜூலை 28-ஆம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த் கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் பல்வேறு விடயங்களை பேசி தனது மனதில் இருந்த பல சம்பவங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்படி ரஜினிகாந்த் பேசுகையில் பகிர்ந்ததாவது : இந்த ஜெயிலர் படத்தில் முதலில் தனது நெருங்கிய நண்பர் தான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என என்னை அவரிடம் பேச சொன்னார்கள். நானும் அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசி எனக்கு வில்லனாக நடிக்கும்படி கேட்டுக் கொண்டேன். அவரும் சம்மதம் தெரிவித்து விட்டார். அதன் பிறகு தான் மறுநாள் அவர் வில்லனாக நடித்தால் என்னை அடிக்க வேண்டியிருக்குமே இன்று எனக்குத் தோன்றியது.

Rajini-and-Kamal

அதன் பிறகு நான் உடனே நெல்சனுக்கு போன் செய்த போது அவருக்கு இந்த விஷயத்தை தெரிவித்த போது அவரும் அதையேதான் சொன்னார். பிறகு நான் என் நண்பரை அழைத்து இந்த காட்சிகள் குறித்து எடுத்து கூறினேன். அவரும் பெருந்தன்மையுடன் உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அதையே செய்யுங்கள் என கூறிவிட்டார். பிறகு விநாயகனை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தோம் என ரஜினி கூறியிருந்தார்.

இந்நிலையில் ரஜினியை அடிக்க இருந்த அந்த வில்லன் நடிகர் யாரெனில் : வேறு யாருமில்லை உலக நாயகன் கமலஹாசன் தான். சூப்பர் ஸ்டாரின் நெருங்கிய நண்பரான கமலஹாசன் மட்டும் இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் இந்திய முழுவதும் பேசப்படும் படமாக இந்த ஜெயிலர் படம் அமைந்திருக்கும் என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்