சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகளை ரசிகர்கள் எப்போதுமே மறக்க மாட்டார்கள். ஏனெனில் அவர்களது இளமையான அழகும் நடிப்பும் நடனமும் ரசிகர்களின் மனங்களில் அப்படியே நிலைத்து நின்று விடுகின்றன. அந்த வரிசையில் ஒருவர்தான் நடிகை நிவேதா பெத்துராஜ். தமிழில் இவர் நடித்த படங்களில் எண்ணிக்கை மிக குறைவு என்றால் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஒரு நடிகையாக உள்ளார்.
ஒரு நாள் கூத்து டிக் டிக் டிக் திமிரு புடிச்சவன் பொதுவாக எம்மனசு தங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நிவேதா பெத்துராஜ். தெலுங்கிலும் அவர் சில படங்களில் நடித்திருக்கிறார். தாராளமாக கவர்ச்சி காட்டி நடிக்கும் சில நடிகைகளில் இவரும் ஒருவராக இருக்கிறார். துபாயில் வசித்து வரும் நிவேதா பெத்துராஜ் கடந்த 2023ம் ஆண்டுக்கு பிறகு படங்களில் நடிக்கவில்லை.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நடிக்காமல் பிரேக் விட்டிருந்த நடிகை நிவேதா பெத்துராஜ் கார் ரேஸில் ஆர்வம் காட்டினார். சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் நடந்த கார் ரேஸ்களிலும் அவர் ஆர்வமாக கலந்து கொண்டார். துபாய் தொழில்விபர் ரஜித் இப்ரானுடன் அவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் திருமணம் நடக்காமல் நின்று விட்டது. இந்த ரஜித் இப்ரான் பிக்பாஸ் ஜூலியின் முன்னாள் காதலர் என்றும் அப்போது இணையத்தில் தகவல் பரவியது. ஆனால் சில காரணங்களால் நிவேதா பெத்துராஜ் திருமணம் தடைபட்டு நின்று போனது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் நிவேதா பெத்துராஜ் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
மீண்டும் சினிமாவில் நடிக்க அவர் முழு ஈடுபாட்டுடன் தயாராகி விட்டார் என்று தெரிய வந்துள்ளது. தெலுங்கு இயக்குனர் த்ரிவிக்ரம் முதல் முறையாக நடிகர் வெங்கடேஷ் உடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்துக்கு ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47 என டைட்டில் வைக்கப்பட்டு உள்ளது. இதில் கதாநாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.
இந்த படத்துக்கு தமன் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தில் நடிகை நிவேதா பெத்துராஜ் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கிய அல வைகுந்தபுரம் படத்தில் நிவேதா பெத்துராஜ் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் நடிக்க துவங்கியுள்ள நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழ் படங்களிலும் மீண்டும் நடிக்க வேண்டும் என்று தமிழ் சினிமா ரசிகர்கள் ஆர்வமாக அழைப்பு விடுத்துள்ளனர்.





