- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினியின் இரட்டை வேடம், இதெல்லாம் யாரும் ஏத்துக்கமாட்டாங்க- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்

ரஜினியின் இரட்டை வேடம், இதெல்லாம் யாரும் ஏத்துக்கமாட்டாங்க- கொந்தளித்த பிரபல தயாரிப்பாளர்

- Advertisement -

ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் உலகளவில் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.500 கோடிகள் வசூலை தாண்டியுள்ளது. இது “விக்ரம்”, “பொன்னியின் செல்வன்” ஆகிய திரைப்படங்களின் வசூலை விட அதிகமாகும்.

ரஜினிகாந்த் “ஜெயிலர்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மதுப்பழக்கத்தை குறித்து பேசினார். “குடி பழக்கம் என்பது எனக்கு நானே வைத்துக்கொண்ட சூனியம். தினமும் மது அருந்தும் பழக்கத்தை மட்டும் வைத்துக்கொள்ளாதீர்கள். அதற்காக குடிக்கவே வேண்டாம் என்று கூறவில்லை. எப்போதாவது குடியுங்கள்.

குடிப்பழக்கத்தால் உங்கள் வாழ்க்கையே கெட்டுப்போகும். உங்களது குடிப்பழக்கத்தால் நீங்கள் மட்டும் கஷ்டப்படவில்லை, உங்களது குடும்பத்தினரும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களை கஷ்டப்படுத்துவதற்கு உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது” என்று அறிவுரை கூறினார்.

ஆனால் “ஜெயிலர்” திரைப்படத்தில் ரஜினிகாந்த் புகைப்பிடிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. ரஜினிகாந்த் சமீப காலமாக அவரது திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிக்கவில்லை. இவ்வாறு பல வருடங்கள் கழித்து புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்தது ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்தது.

இந்த நிலையில் பிரபல தயாரிப்பாளரான கே.ராஜன், சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “ஜெயிலர் படத்தில் ரஜினி செய்தது மிகப்பெரிய தவறு. இசை வெளியீட்டு விழாவில் மது அருந்தாதீர்கள், புகை பிடிக்காதீர்கள் என்று கூறினார். ஆனால் ஜெயிலர் படத்தில் புகை பிடிக்கிறார். இதனை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்.

ரஜினிகாந்த் எனக்கு நல்ல நண்பர்தான். ஆனால் என்னதான் நண்பராக இருந்தாலும் அவர் செய்தது தவறுதான். அவர் அதனை தவிர்த்திருக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

 

சற்று முன்