- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்திரன் படத்தில் முதலில் நடித்தது அந்த ஹீரோதான், ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு படத்தில் இருந்து வெளியேறி...

எந்திரன் படத்தில் முதலில் நடித்தது அந்த ஹீரோதான், ஷூட்டிங் ஆரம்பித்த பிறகு படத்தில் இருந்து வெளியேறி விட்டேன் – இயக்குனர் ஷங்கர் ஓபன்டாக்!

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 33 ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆரம்பத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக இருந்தார். பிறகு அவரது இயக்கத்தில் முதல் படமாக ஜெண்டில் படம் 1993ம் ஆண்டில் வெளியானது. நடிகர் அர்ஜூன் மதுபாலா கவுண்டமணி செந்தில் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.

முதல் படமே மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்து அவர் இயக்கிய காதலன் ஜீன்ஸ் முதல்வன் இந்தியன் அந்நியன் என பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. இதுவரை ஷங்கர் இயக்கிய 15 படங்களில் இந்தியன் 2 கேம் சேஞ்சர் படங்கள் தவிர மற்ற அனைத்து படங்களுமே பெரிய ஹிட் படங்களாகும்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடித்த சிவாஜி எந்திரன் மற்றும் ரோபோ 2.0 ஆகிய 3 படங்களை ஷங்கர் இயக்கியுள்ளார். இந்த 3 படங்களுமே சூப்பர் ஹிட் படங்களாக இருந்தன. அதிலும் ரஜினிகாந்த் ஐஸ்வர்யா ராய் நடித்த எந்திரன் படம் 2010ம் ஆண்டில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் வசீகரன் சிட்டிபாபு என 2 வேடங்களில் ரஜினி நடித்திருந்தார்.

ஆராய்ச்சியாளர் ரஜினி ஒரு மனித ரோபோவை 10 ஆண்டுகளாக போராடி கண்டுபிடிப்பார். அந்த மனித ரோபோ ஒரு கட்டத்தில் ரஜினியின் காதலி ஐஸ்வர்யா ராயை காதலிக்க ஆரம்பிக்கும். அந்த கோபத்தில் தனது ரோபோவை ரஜினியே அடித்து உடைத்து அழித்து விடுவார். கடைசியில் வில்லன் கையில் கிடைக்கும் ரஜினியின் ரோபோ, செய்யும் வில்லத்தனம்தான் படத்தின் விறுவிறுப்பான கதையாக இருந்தது.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் ஷங்கர் எந்திரன் படம் குறித்து கூறியதாவது, சிவாஜி படம் ரிலீஸ் ஆன பிறகு பாலிவுட்டில் இருந்து ஷாருக்கான் சார் கதை சொல்ல என்னை கூப்பிட்டார். நானும் எந்திரன் படத்தோட கதையை அவரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து படம் ஸ்டார்ட் ஆயிடுச்சு.

ஆனால் பின்னாடி சில காரணங்களால் நான் அந்த புராஜெக்ட்டில் இருந்து வெளியே வந்து விட்டேன். அப்புறம் நிறைய பேர்கிட்ட எந்திரன் கதை சொல்லி கடைசியில் தான் ரஜினிகாந்த் தான் அந்த படத்தை பண்ணினார் என்று இயக்குனர் ஷங்கர் கூறியிருக்கிறார். இந்த படத்தில் முதலில் எந்திரன் கேரக்டரில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பதாகவும் ஒரு தகவல் இருந்தது.

- Advertisement -

சற்று முன்