- Advertisement -
Homeபொழுதுபோக்குநீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டிய அவசியமில்லை - கருப்பு படம் தடை கோரிய வழக்கில் அமர்வு...

நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டிய அவசியமில்லை – கருப்பு படம் தடை கோரிய வழக்கில் அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

- Advertisement -

இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த கருப்பு படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கருப்பு படத்தில் நீதித்துறையை அவமதித்து இருப்பதாக கூறி திரையரங்குகளில் கருப்பு படத்தை தடை செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் தமிழ்வேந்தன் பொது நலவழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் சுவாமிநாதன் லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு விசாரித்து வழக்கை தள்ளுபடி செய்தது. அப்போது நீதிபதிகள் அமர்வு கூறியதாவது, கருப்பு படத்தின் கதைக்களம் என்பது ஏழு கிணறு என்ற இடத்தில் அமைந்துள்ள ஒரு நீதிமன்றம். அதிலிருக்கும் தலைமை நீதிபதி ஊழல்வாதியாகவும் தொழில் நெறிமுறையற்ற வழக்கறிஞர் ஒருவர் நீதிமன்ற செயல்பாடுகள் மீது அளவற்ற அதிகாரத்தை செலுத்துவதாகவும் அமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

நீதித்துறையில் ஊழல் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஊழல் நீதிபதிகள் இருந்தார்கள். இருக்கவும் செய்கிறார்கள். நீதிபதிகளை புனிதமானவர்களாக கருத வேண்டிய அவசியம் இல்லை. நீதித்துறையில் ஊழல் என்பதை நாங்கள் முழுமையாக ஆதரிக்க மறுக்கிறோம். நீதித்துறை ஊழல் நிகழ்வுகளை அறிவோம். எதிர்கொண்டும் இருக்கிறோம். சென்னை ஐ கோர்ட்டின் முழு அமர்வும் இதுபோன்ற கருப்பு ஆடுகளை தவறாமல் வெளியேற்றிக் கொண்டுதான் உள்ளது.

வழக்கறிஞர் சங்கத்தின் சில உறுப்பினர்களுக்கு ஊழல்வாதிகளுடன் தொடர்பில்லாமல் நீதித்துறையில் ஊழல் நிகழ முடியாது. ஊழல்வாதிகளை பிடிப்பதற்கும் நிலைமையை உரிய முறையில் கையாளுவதற்கும் உயர்நீதிமன்றத்தின் விழிப்புணர்வு கண்காணிப்பு ஆதாரமாக விளங்குகிறது. கருப்பு படத்தை ஒரு நீதிபதி பார்த்துள்ளார். ஒரு நெறிமுறை அற்ற வழக்கறிஞருக்கும் ஊழல் நீதிபதிக்கும் இடையிலான தீய கூட்டணியை கொண்ட கருப்பு படத்தில் நீதித்துறை அமைப்பு மிகைப்படுத்தி சித்தரிக்கப்பட்டுள்ளது என்பது உண்மைதான்.

- Advertisement -

ஆனால் தமிழ் திரையுலகில் படங்கள் அப்படித்தான் பார்க்கப்படுகின்றன. தன்னை சூழ்ந்திருக்கும் டஜன் கணக்கான வில்லன்களை கதாநாயகன் தனி ஒருவனாக வீழ்த்துவது போல தமிழ் சினிமாவில் எல்லாமே மிக உணர்ச்சி கொண்டது. எனவே கருப்பு படத்தையும் ஒரு தனித்துவமான படைப்பாகவே பார்க்க வேண்டும். ஒரு கலைஞர் தனது சொந்த வழியில் தன் படைப்பை வழங்கும் உரிமையை கலை சுதந்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு கலைஞருக்கு அதிக செல்வாக்கும் சுதந்திரமும் உண்டு.

ஒரு கதையை வழங்கும் விதமும் வழங்கும் உள்ளடக்கமும் படைப்பாளியிடமே விடப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட பகுதிகளுக்குள் படைப்பாளி நுழையாத வரை படைப்பாற்றல் மதிக்கப்பட வேண்டும். ஒரு கற்பனையான நீதிமன்றத்திற்கு தலைமை தாங்கும் நபர் ஊழல்வாதியாக சித்தரிக்கப்படும் போது அது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தில் கீழ் வராது. அவ்வாறு கற்பனையாக சித்தரிக்கப்பட்ட நீதிமன்றத்தில் ஊழல் என இயக்குனரே கூறியுள்ளார். தவிர ஒட்டுமொத்த நீதித்துறை அமைப்பையும் ஊழல் செய்பவராக சித்தரிக்கவில்லை. எனவே கருப்பு படத்தை தடை செய்யக் கோரிய வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிமன்ற அமர்வு உத்தரவில் கூறியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்