- Advertisement -
Homeபொழுதுபோக்குஏஐ தொழில்நுட்பம் நம்மை கெடுக்கிறது, சிந்திக்க விடாமல் தடுக்கிறது, பிற்காலத்தில் மூளையே வேலை செய்யாது -...

ஏஐ தொழில்நுட்பம் நம்மை கெடுக்கிறது, சிந்திக்க விடாமல் தடுக்கிறது, பிற்காலத்தில் மூளையே வேலை செய்யாது – இசையமைப்பாளர் கங்கை அமரன் ஆவேசம்!

- Advertisement -

இசைஞானி இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் இசையமைப்பாளர் திரைப்பட இயக்குனர் பாடல் ஆசிரியர் மற்றும் பாடகர் என பன்முக தன்மை கொண்டவர். கடந்த 1980 90களில் வெளியான பல சூப்பர் ஹிட் பாடல்களை எழுதியவர் கங்கை அமரன்தான். அவர் இயக்கிய கரகாட்டக்காரன் படம் இன்றும் கொண்டாடப்படுகிறது.

சமீபத்தில் கங்கை அமரன் ஒரு விழாவில் பேசும்போது தனது அண்ணன் இளையராஜா குறித்து தவறான விமர்சனங்களை முன்வைக்க வேண்டாம். 50 ஆண்டுகளாக இசையில் நிலைத்து நின்ற ஒருவரை இசையில் ஜெயித்துக் காட்டிய ஒருவரை மட்டம் தட்டி பேசி அவரை கீழே இறக்க வேண்டாம். அவரை புகழாவிட்டாலும் பொய்யாக குறை சொல்லி எழுதாதீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

இந்நிலையில் கங்கை அமரன் எழுதியுள்ள உயிரிணையே என்ற இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த இசை ஆல்பத்தை டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மென்ட் சார்பில் கிளாடி ஜெரால்டு தயாரித்துள்ளார். சகோ கணேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த இசை ஆல்பத்துக்கு சதா சுதர்சனம் இசையமைத்துள்ளார்.

இந்த ஆல்பத்தின் பாடல்களை தவசீலிதன் ராஜ் பர்ஹான் நவாஸ் ஆகியோர் பாடியுள்ளனர். இந்த இசை ஆல்பம் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கங்கை அமரன் பேசியதாவது, முன்பெல்லாம் ஒரு பாடலை தொடர் அலையாக பாடுவோம். இப்போது ஒவ்வொரு வரியாக பாடுகிறோம். செயற்கை தொழில்நுட்பத்தில் ஏஐயை பீட் பண்ணி பாடுகிறோம்.

- Advertisement -

அதற்கு நாம் எப்படி நம்மை பெருமைப்படுத்தி கொள்வது? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் ஏஐ தொழில்நுட்பம் நம்மை கெடுத்துக் கொண்டிருக்கிறது என்பதை உறுதியாக சொல்கிறேன். அதை நம்பி வேலை செய்தால் பிற்காலத்தில் மூளை வேலை செய்யாது. ஒரு தீமை ஏஐயிடம் கொடுத்து விட்டால் அதுவே பாட்டு எழுதி விடுகிறது.

இதில் எப்படி நம் பெயரை போட்டுக்கொள்வது? எதற்கு சொல்கிறேன் என்றால் வருங்காலத்தில் குழந்தைகள் தன்னால் சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும். வருங்கால குழந்தைகள் தன்னிடம் இருக்கின்ற சுயரூபங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்பதுதான் என் மனமார்ந்த ஆசை என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் அந்த விழாவில் பேசியிருக்கிறார். ஏஐ தொழில்நுட்பம் குறித்து அவர் எதிர்மறையாக பேசியிருப்பது இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்