- Advertisement -
Homeபொழுதுபோக்குஉன்கிட்ட ரகசியம் சொல்லணும், அதனால் உடனே சொந்தமா போன் வாங்கிடு - பிரபல நடிகரிடம்...

உன்கிட்ட ரகசியம் சொல்லணும், அதனால் உடனே சொந்தமா போன் வாங்கிடு – பிரபல நடிகரிடம் பேசிய நடிகர் மம்முட்டி!

- Advertisement -

மலையாள சினிமாவில் பெயர் சொல்லும்படியான சிறந்த நடிகர்களில் ஒருவர் இந்திரன்ஸ். ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். காமெடி குணச்சித்திரம் என எந்த மாதிரியான கேரக்டர் என்றாலும் அதில் தனது அழுத்தமான நேர்த்தியான நடிப்பை இந்திரன்ஸ் வெளிப்படுத்தி வருகிறார்.

கேரளாவில் இருந்து பல நடிகர்கள் தமிழில் நடித்து வருகின்றனர். குறிப்பாக திலகன் மோகன்லால் ஜெயராம் சுரேஷ்கோபி பகத் பாசில் மம்முட்டி பிருத்விராஜ் என இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகும். அந்த வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் நடிகர் இந்திரன்ஸ். இவர் சூர்யா நடித்த கருப்பு படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

- Advertisement -

கருப்பு படத்தில் நகைகளை இழந்து விட்டு அந்த நகைகளை மீட்க போராடும் இந்திரன்ஸ், கோர்ட்டில் நகையை திரும்ப பெற முடியாமல் சிக்கலில் தவிப்பதும் ஒரு கட்டத்தில் வக்கீல் ஆர்ஜே பாலாஜி தன்னை ஏமாற்றுவதை உணர்ந்து கருப்பசாமியிடம் முறையிடுவதும்தான் படத்தின் மையக்கதையாக உள்ளது.

கருப்பு படத்தில் மிக அசத்தலான நடிப்பை தந்த மலையாள நடிகர் இந்திரன்ஸ் தமிழில் எப்படியும் ஒரு ரவுண்டு வருவார்கள் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற நடிகர் இந்திரன்ஸ் கூறியதாவது, கருப்பு படத்துல ஒரு காட்சியில் எனக்கு ஜிபே பண்ண தெரியாது சார் என்று சொல்கிற மாதிரி ஒரு காட்சி வரும்.

- Advertisement -

எனக்கு நிஜத்திலும் போனில் இருந்து ஜிபே பண்ண தெரியாது. எல்லாருகிட்டயும் என் பையன் நம்பர் தான் இருக்கும். அவன்தான் எல்லாத்துக்கும் ரிப்ளை பண்ணுவான். ஒரு முறை மம்முட்டி சார் எனக்கு போன் பண்ணி உன்கிட்ட ஏதாவது ரகசியம் சொல்லனும்னா எப்படி சொல்ல முடியும்? உனக்கு என்று ஒரு போன் வாங்குன்னு சொன்னார்.

அதுக்கு அப்புறம் தான் நான் எனக்குன்னு ஒரு ஆண்ட்ராய்டு போனை புதுசா வாங்கினேன். இப்ப கூட அதை எனக்கு சரியா பயன்படுத்தத் தெரியாது. அடிக்கடி போனை நோண்ட தெரியாது என்று நடிகர் இந்திரன்ஸ் கூறியிருக்கிறார். கடைசி வரை மம்முட்டி என்ன ரகசியம் சொன்னார் என்று நீங்க சொல்லவே இல்லையே என்று நடிகர் இந்திரன்ஸ்சை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்