- Advertisement -
Homeபொழுதுபோக்குசக நடிகரின் உயிரை பொருட்படுத்தாமல் சாகசம் காட்டிய அஜீத்குமார் - தலை குப்புற கவிழ்ந்த கார்...

சக நடிகரின் உயிரை பொருட்படுத்தாமல் சாகசம் காட்டிய அஜீத்குமார் – தலை குப்புற கவிழ்ந்த கார் – விடாமுயற்சி படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்

- Advertisement -

நடிகர் அஜீத்குமார் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கிற முக்கிய 4 நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அஜீத்குமார் படங்கள் என்றாலே, நிச்சயம் நஷ்டம் தராது என்ற வகையில் அவரது படங்களை தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர். டாப் ஸ்டார்களில் ஒருவரான அவரை இயக்க இயக்குனர்கள் தீவிர ஆர்வம் காட்டுகின்றனர்.

அஜீத்குமாருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஸ்போர்ட்ஸில் அதிக ஆர்வம் கொண்டவர். குறிப்பாக கார் ரேஸ், பைக் ரேஸ், ரைபிள் சூட்டிங் போன்றவற்றில் அடிக்கடி கலந்துக்கொள்பவர். 20 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறை பைக் ரேஸில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய அஜீத்குமாருக்கு முதுகுதண்டில் ஆபரசேன் செய்யப்பட்டுள்ளது. அதனால் அவள் வருவாளா உள்ளிட்ட பல படங்களில் நடித்த போது முதுகுவலியால் பயங்கரமாக அவதிப்பட்டார்.

- Advertisement -

இப்போதும் அவருக்கு ஸ்போர்ட்ஸ் ஆர்வம் குறையவில்லை. குறிப்பாக பைக்கில், நீண்ட தூரம் தன் நண்பர்களுடன் ரைடு போவதை விருப்பமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் கூட அவருக்கு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவருக்கு ஆபரேசன் நடந்த சில தினங்களில் நண்பர்களுடன் பைக் டூர் கிளம்பி விட்டார்.

நடிகர் அஜீத்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, இன்று ஒரு சில வீடியோக்களை தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அஜீத் குமார் ரசிகர்களை பதற வைக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. அதாவது நடிகர் அஜீத்குமாரும், அருகில் பனியனுடன் நடிகர் ஆரவ்வும் காரில் அமர்ந்தபடி பயணிக்கின்றனர். காரை அஜீத்குமார் ஓட்டுகிறார். அப்போது கார் திடீரென நிலைதடுமாறி தாறுமாறாக ஓடி தலைகுப்புற கவிழ்கிறது.

- Advertisement -

அந்த கடைசி விநாடிகளில் பதட்டத்துடன் காரை அஜீத் சரியாக ஓட்ட முயற்சிப்பதும், கார் கட்டுப்பாட்டை இழந்து, பலூன்கள் உப்பிய நிலையில், கவிழ்ந்து விழுவதும், அதை பார்த்து சுற்றியிருந்த படப்பிடிப்புக் குழுவினர் காரை நோக்கி பதட்டமாக ஓடுவதும் என 3 வீடியோக்களை சுரேஷ் சந்திரா பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஆரவ் வெளியிட்டுள்ள ஒருபதிவில், விடாமுயற்சி ஷூட்டிங்கின் போது நடந்த ஒரு எதிர்பாராத விபத்தில் நானும், அஜீத்குமாரும் நூலிழையில் உயிர் தப்பினோம். எங்களை காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி இது ஷூட்டிங்கின் போது நடந்த உண்மையான விபத்து என்பது உறுதியாகி விட்டது. தன் உயிரையும் மதிக்காமல், அருகில் அமர்ந்து பயணிக்கும் சக நடிகரின் உயிரையும் மதிக்காமல் அஜீத்குமார், இந்த வயதில் இப்படி எல்லாம் ரிஸ்க் எடுப்பது சரியா என, அஜீத்குமார் ரசிகர்களே அவரை திட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்