- Advertisement -
Homeபொழுதுபோக்கு4 நாட்களில் வசூலை அள்ளிய பிளாஸ்ட் படம் - தெலுங்கிலும் இதே போல் பட்டைய கிளப்புமா?

4 நாட்களில் வசூலை அள்ளிய பிளாஸ்ட் படம் – தெலுங்கிலும் இதே போல் பட்டைய கிளப்புமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் ஆக்சன் கிங் நடிகர் அர்ஜூன். சினிமா இயக்குனர் தயாரிப்பாளர் வினியோகஸ்தர் என பன்முக தன்மை கொண்டவர். அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் உமாபதி ராமையா ஆகியோரும் படங்களில் நடித்து வருகின்றனர்.

அறிமுக இயக்குனர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் பிளாஸ்ட். நடிகர் அர்ஜூன் அபிராமி ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்த பிளாஸ்ட் படம் கடந்த மே 28ம் தேதி வெளியானது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

- Advertisement -

அதனால் ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே இந்த படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்தன. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்துவரும் நிலையில் 4 நாட்களில் சுமார் 20 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

ஆனால் இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 15 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது. இன்னும் ஒரு வாரத்தில் இந்த படம் தெலுங்கில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

- Advertisement -

தமிழகத்தில் நல்ல வரவேற்பு பெற்ற படங்கள் ஆந்திராவிலும் நல்ல வசூலையும் ரசிகர்களின் ஆதரவையும் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான பிளாஸ்ட் படம் 4 நாட்களிலேயே 20 கோடி ரூபாய் வசூலை அள்ளிய நிலையில், வரும் நாட்களில் வசூல் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சின்ன பட்ஜெட்டில் உருவான படங்கள் கணிசமான லாபம் தரும் நிலையில் அந்த பட்டியலில் பிளாஸ்ட் படமும் இடம் பிடிக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் அர்ஜூனுக்கு இந்த படம் ஒரு நல்ல கம்பேக் கொடுத்திருக்கிறது. இந்த படத்தில் அர்ஜூன் ஜோடியாக நடித்த அபிராமியும் வானவில் படத்துக்கு பிறகு அர்ஜூனுடன் மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்