- Advertisement -
Homeபொழுதுபோக்குமறுபடியும் பஞ்சாயத்தில் சிக்கிய விஷால்... இந்த முறை வேறு ஒரு இயக்குனருடன் மோதலா... இயக்கத்தையும் அவரே...

மறுபடியும் பஞ்சாயத்தில் சிக்கிய விஷால்… இந்த முறை வேறு ஒரு இயக்குனருடன் மோதலா… இயக்கத்தையும் அவரே கையில் எடுக்க முடிவு செய்துவிட்டாரா…

- Advertisement -

தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷால் அவ்வபோது ஏதாவது சர்ச்சையில் சிக்குவார். உதாரணத்துக்கு துப்பறிவாளன் இரண்டாம் பாகத்திற்கான விஷயத்தை சொல்லலாம். இந்தத் திரைப்படத்தின் முதல் பாகத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். அடுத்தடுத்து நிகழும் கொலை சம்பவத்தைத் தொடர்ந்து அந்த கும்பலை கண்டுபிடிக்கும் துப்பறிவாளனாக விஷால் நடித்திருந்தார்.

திரைக்கதையில் அப்படி ஒரு விறுவிறுப்பு, புத்திசாலித்தனமான காட்சிகள், தெறிக்கவிடும் ஆக்சன் என அனைத்தும் பக்காவாக இருந்ததால் துப்பறிவாளன் திரைப்படம் வெற்றி பெற்றது. மிக முக்கியமாக அதில் விஷாலின் கதாபாத்திரம் அருமையாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஒரு கொலை சம்பவத்துக்கு பின்னால் அவர் விசாரிக்கும் புத்திசாலித்தனமான காட்சிகள் இங்கு பலரையும் கைதட்டல் பெற வைத்தன.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எடுக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. லண்டன் நகரை மையமாக வைத்து இந்தப் படத்தின் சூட்டிங்கை எடுத்தார்கள். அப்போது இயக்குனருக்கும் நடிகருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அது மோதலாகவே மாறி இருவரும் பிரிந்தார்கள்.

பின்னர் ஒரு பேட்டியில் பேசியிருந்த மிஷ்கின், விஷாலை பகிரங்கமாக திட்டினார். அவர் ஒரு பொறுக்கி என்றும் கூறினார். இந்த வீடியோ பூதாகரமாக வெடித்தது. தொடர்ந்து துப்பறிவாளன் இரண்டாம் பாகத்தை தானே இயக்குவதாக அறிவித்தார் விஷால். ஆனால் அந்த திரைப்படத்தின் தகவல் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை.

- Advertisement -

இதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் விஷால் நடித்து வருகிறார். இதில் பெரும்பாலான படங்கள் அவருக்கு தோல்வியை கொடுத்தன. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அவர் நடித்த மார்க் ஆண்டனி திரைப்படம்தான் இதில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் தற்போது மகுடம் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஷால். சூப்பர் குட் பிலிம்ஸ் இதனை தயாரிக்கிறது.

ஈட்டி மற்றும் ஐயங்கரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய ரவி அரசு இதனை எடுத்து வருகிறார். படத்தில் விஷால் மூன்று கெட்டப்களில் நடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதன் புகைப்படங்களும் வெளியாகின. இந்த நிலையில் படப்பிடிப்பின்போது இயக்குனர் ரவி அரசுவுக்கும், விஷாலுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும், இதையடுத்து படத்தில் இருந்து இயக்குனர் வெளியேறி விட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. தொடர்ந்து மகுடம் திரைப்படத்தை விஷாலை இயக்க முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த தகவலில் உண்மை இல்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் இருந்து சிலர் கூறுகிறார்கள். வழக்கம்போல ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடித்து வருவதாகவும் அவர்கள் விளக்கம் அளித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

சற்று முன்