தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருபவர் அர்ஜூன். ஆக்சன் கிங் என்று அவர் ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். அதற்கு காரணம் அவரது படங்களில் டூப் போடாமல் அவரே சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்து அசத்தி விடுவார். அவரது படங்களில் சண்டை காட்சிகள் மிக பிரமாதமாக இருந்து வருகிறது.
இப்போது 62 வயதான நிலையிலும் நடிகர் அர்ஜூன் 40 வயதுக்கு உரிய தோற்றத்தில் கட்டுமஸ்தான உடல்கட்டான நிலையில் சுறுசுறுப்பாக காணப்படுகிறார். சமீபத்தில் அர்ஜூன் அபிராமி மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடித்த பிளாஸ்டர் படம் வெளியாகி பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றுள்ளது.
நடிகர் அர்ஜூன் நடித்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டவை. குறிப்பாக ஜெண்டில்மேன் முதல்வன் ஜெய்ஹிந்த் சேவகன் பிரதாப் வானவில் போன்ற படங்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவை. அதே போல் ரிதம் வேதம் போன்ற படங்களும் சிறந்த படங்களாக இருந்தன.
நடிகராக மட்டுமின்றி இயக்குனர் தயாரிப்பாளர் வினியோகஸ்தர் என்ற அடையாளங்களும் நடிகர் அர்ஜூனுக்கு உண்டு. ஆனால் ஆரம்பகாலத்தில் அர்ஜூன் பெரும்பாலான படங்களில் நடித்த போதும் அந்த படங்களில் ஆக்சன் நாயகனாக இருந்தாரே தவிர அவரது நடிப்பு பெரிய அளவில் பேசப்படவில்லை.
சமீபத்தில் இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அர்ஜூன் கூறியதாவது, எனக்கு தெரிஞ்சவங்க என்னை மத்தவங்க கிட்ட அறிமுகப்படுத்தும்போது இவர் அர்ஜூன் நல்லா பைஃட் பண்ணுவாங்க அப்படீன்னு சொல்லுவாங்க. ஆனா பைஃட்டர்ன்னு சொல்றாங்க. நல்ல நடிகன்னு சொல்லலையே என்று யோசித்தேன்.
அதுக்கு அப்புறம் சிவாஜி கணேசன் நாகேஷ் சார் படங்கள் எல்லாம் நிறைய பார்க்க ஆரம்பித்தேன். அவங்க நடிப்பு பாவனை கண்ணு எப்படி யூஸ் பண்றாங்க? எந்த சூழ்நிலையில் எப்படி நடிக்கிறாங்க? காமெடி டைமிங் என்ன டயலாக் எப்படி சொல்றாங்கன்னு அப்படீன்னு பார்த்து அப்புறமாக தான் நான் நடிக்கவே கற்றுக்கொண்டேன் என்று நடிகர் அர்ஜூன் அந்த நேர்காணலில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.





