- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினி பாணியில் வாழ்க்கை தத்துவம் பேசிய நடிகர் செந்தில் - பாய்ஸ் படத்துல மாதிரி நிஜத்துலேயும்...

ரஜினி பாணியில் வாழ்க்கை தத்துவம் பேசிய நடிகர் செந்தில் – பாய்ஸ் படத்துல மாதிரி நிஜத்துலேயும் அன்னவெறி கண்ணையன் அசத்தறாரே? – பாராட்டும் ரசிகர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்து போனாலும் கவுண்டமணி செந்தில் என்ற காமெடி கூட்டணியை யாராலும் மிஞ்ச முடியாது. குறிப்பாக 1980 90களில் அவர்களது காமெடி தமிழ் சினிமாவில் தனி சாம்ராஜ்யமாக இருந்தது. அதிலும் கவுண்டமணி பஞ்ச் டயலாக் உச்சம் தொட காரணமாக இருந்தவரே அவருடன் இணைந்து நடித்த செந்தில்தான்.

இப்போதும் பலர் மனச்சோர்வாக உணர்ந்தால் உடனே கவுண்டமணி செந்தில் காமெடி காட்சிகளை பார்க்க துவங்கி விடுவார்கள். அடுத்த சில நிமிடங்களில் அவர்களது தானாகவே ரிலாக்ஸ் வந்துவிடும். ஏனெனில் அவர்கள் செய்த காமெடி காட்சிகள் அவ்வளவு இயல்பாக இருக்கும். வசனங்களும் குபீர் சிரிப்பை வரவழைக்கும்.

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் சாமியாராக அன்னவெறி கண்ணையன் என்ற கேரக்டரில் நடித்திருப்பார். தனது உதவியாளராக இருக்கும் நடிகர் மணிகண்டனிடம் சென்னையில் உள்ள குறிப்பிட்ட கோவில்களுக்கு காலை மதியம் இரவு என குறிப்பிட்ட நேரங்களில் சென்று உணவு வாங்கி வரச்சொல்லி இருவரும் அதை சாப்பிடுவார்கள்.

அப்போது இப்படி உட்கார்ந்த இடத்தில் ஓசியில் வாங்கி சாப்பிடுவது எல்லாம் ஒரு பொழப்பா என்று செந்திலை மணிகண்டன் விமர்சிப்பார். அதற்கு செந்தில், நாளைக்கு நீ இந்த இடங்களுக்கு போனால் எதுவும் கிடைக்காது. ஆண்டு முழுவதும் எங்கெங்கு எது எது எப்போது கிடைக்கும் என்று எனக்குதான் தெரியும். ஓடியாடி உழைப்பது சம்பாதிப்பது எல்லாமே சாப்பிடறதுக்குதானே என்று தத்துவம் பேசுவார்.

- Advertisement -

அந்த படத்தில் வரும் காட்சியை போலவே நிஜத்திலும் நடிகர் செந்தில் வாழ்க்கை குறித்த தத்துவம் ஒன்றை பேசியிருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் செந்தில் கூறியதாவது ஆண்டவன் நமக்கு கொடுக்கறதுதான் கொடுப்பான் அதை வெச்சுக்கிட்டு வாழணும். திடீர்ன்னு பணக்காரன் ஆக்கி விட்டுடுவான்.

திடீர்ன்னு ஒண்ணுமே இல்லாம பண்ணி விட்டுடுவான். அதுக்கு தகுந்த மாதிரி நம்ம வாழனும், இப்போ வரைக்கும் நான் அப்படித்தான் வாழ்ந்துட்டு இருக்கேன் என்று நடிகர் செந்தில் கூறியிருக்கிறார். பணக்காரனாக இருப்பதும் ஏழையாக இருப்பதும் நம் கையில் இல்லை. எந்த நிலையில் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள வாழ பழக வேண்டும் என்கிற செந்திலின் இந்த வாழ்க்கை தத்துவத்தை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்