நடிகர் வடிவேலு, தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக கோலோச்சியவர். கடந்த 1990 முதல் 2010 வரை அவர், தமிழ் சினிமாவில் ஒரு காமெடி சாம்ராஜ்யமே நடத்தினார் என்றால் அது மிகையல்ல. தினமும் 10 லட்சம் முதல் 12 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்ற ஒரே காமெடி நடிகர் வடிவேலுதான்.
தனக்கென ஒரு காமெடி துணை நடிகர்கள் குழுவை வைத்துக்கொண்டு, அவர் தமிழ் சினிமாவில் செய்த காமெடி அட்ராசிட்டி, தமிழ் சினிமா வரலாற்றில் மிகப்பெரிய மாயாஜாலங்களை புரிந்தது என்றால் அது மிகையல்ல. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை சந்திரமுகி படத்தில் நடிக்க கமிட் செய்தபோது, முதலில் வடிவேலுவுக்கு கால்சீட் இருக்குதா என்று பாத்துக்குங்க என்று டைரக்டர் பி வாசுவிடம் சொல்லும் அளவுக்கு, வடிவேலு மிக பிஸியான நடிகராக அந்த காலகட்டத்தில் நடித்துக் கொண்டிருந்தார்.
தொடர்ந்து காமெடியில் கிங்காக வலம் வந்த நடிகர் வடிவேலு, பல படங்களின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தார். அவரது காமெடி இருக்கிறதா என்று பார்த்துவிட்டு, அந்த படத்துக்கு செல்லும் ரசிகர் கூட்டமும் மிக அதிகமாக இருந்தது. ஒரு ஹீரோவுக்கு உண்டான தகுதியுடன், இமேஜூடன் தமிழ் சினிமாவில் வலம் வந்தவர் நடிகர் வடிவேலு.
காமெடியாக மட்டுமின்றி சில படங்களில் ஹீரோவாகவும் வடிவேலு நடித்தார். குறிப்பாக இம்சை அரசன் 23ஆம் புலிகேசி, தெனாலி ராமன், இந்திரலோகத்தில் நா அழகப்பன் போன்ற படங்களில் அவரது நடிப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. பல படங்களில் ஹீரோவுக்கு இணையான கேரக்டரில் படம் முழுக்க வரும் நிலையில், வடிவேலுவை பலரும் சிறப்பாக பயன்படுத்தி்க கொண்டனர்.
ஆனால், திடீரென நடிகர் விஜயகாந்த் உடன் சண்டை, தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக மேடைப் பிரச்சாரம், டைரக்டர் ஷங்கருடன் வாக்குவாதம் என தனது சினிமா கேரியரை அவரே முடித்துக்கட்டும் ஒரு சூழ்நிலை உருவாக்கிக் கொண்டார். அதன்பிறகு 10 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் அவர் நடிக்க முடியவில்லை.
இந்நிலையில், 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்த வடிவேலுக்கு பழைய வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை. அதனால் நடிகர் வடிவேலு, டிவி பக்கம் வந்துவிட்டார். சன் டிவியில் மிக விரைவில் ஒளிபரப்பாக உள்ள டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்கிறார். சமையல்கலைஞர்கள் வெங்கடேஷ் தாமோதரன் உள்ளிட்டோர் பங்கேற்கும் இந்த சமையல் நிகழ்ச்சியில் வடிவேலுவும் ஒரு செலிபரட்டியாக கலந்து கொள்கிறார் என்று கூறப்படுகிறது. சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்த வடிவேலுவை பார்த்து, ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.





